இனியவை கற்றல் மின்னிதழ் வாழ்த்துக் கவிதை| முனைவர் ஆசுகவி இனியா

இனியவை கற்றல் மின்னிதழ் வாழ்த்துக் கவிதை - முனைவர் ஆசுகவி இனியா
🔔 இனியவை எல்லாம் இங்கேதான்

இனிமையாக எங்கும் இருப்பதில்லை

இனிப்பை உண்டால் அதனாலே

இனிப்பின்றி எல்லாம் வந்திடுதே

 
🔔 இனியவை இங்கே கற்றாலே

இன்பம் இன்பம் இன்பமே

இனியவை இங்கே கற்பித்தாலோ

இன்பம் இன்பம் பேரின்பமே

 
🔔 இன்பமாய் ஆய்வுகள் எழுதிடவே

மின்னலாய் வந்ததே இனியவை கற்றல்

இன்பமாய் செம்மொழி கற்றிடுவீர்

இனியவை கற்றல் மின்னிதழில் பதிவிடுவீரே

 
🔔 இனிமை வகையில் எழுதிடலாம்
என்றும்
இன்பம் இன்பமே எய்திடலாம்

இனிதான் நன்றாய் வாழ்ந்திடவே

இனியவை கற்றல் மின்னிதழில் வாசிக்க

 
🔔 இன்சுவை இன்சுவை இன்பங்களே

இன்சுவை தமிழால் சேர்ந்திடுமே

இன்சுவை தமிழைக் கற்றுக் கொடுத்திட்டால்

யாவருக்கும் நன்மை பயத்திடுமே

 
🔔 உலகம் நன்மை பெற்றிடவே

கவிதை தந்தவன் தமிழன் அன்றோ

உன்னதம் என்பது எதில் என்றால்

பிறரை உயர்த்தி மகிழ்தல் தானன்றோ

 
🔔 இனியவை கற்றல் மின்னிதழிற்கே

இனிய வாழ்த்துக்கள் நல்வாழ்த்துக்கள்

இனிய தோழா ஆசிரியர் செப்பியதே

 
கவிதையின் ஆசிரியர்

தமிழ்த்தாரகை முனைவர் ஆசுகவி இனியா,

உலகத்தமிழ்த்திருக்குறள் மன்றம், சென்னை – மைசூர்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here