அறமா,அறிவியலா|ரா.ஷர்மிளா

அறமா,அறிவியலா -ரா.ஷர்மிளா
      அறம் தான் உலக கலாச்சாரங்களின் அடிப்படை. சில வழிபாடுகள் கட்டுப்பாட்டையும் சில வழிபாடுகள் உண்மையையும் நமக்கு புரியவைக்கிறது. இந்தியாவில் பூண்டு கட்டுப்பாட்டை குறைக்கும் என்று கூறுகிறோம். சைனா நாட்டில் பூண்டு மருத்துவ குணம் கொண்ட உணவு என்றும் அது கடவுளுக்கு இணையானது என்றும் கூறுகிறார்கள். ஏன் இவ்வளவு வேறுபாடுகள். வழிபாடுகளை வாழ்க்கை முறைகளோடு பொருத்தி பார்த்தால் அர்த்தமுள்ளதாக தெரியும். வாழ்க்கை ஒரு பாதை. அறம்சார்ந்த வாழ்க்கை ஒரு தவம். தவத்தோடு இணைந்த பயணம் இனிமையாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருக்கும்.
         
      அறம், அறிவியல் இருபாதைகளாக தெரிகிறது. தெளிவான சிந்தனைகளுக்கு அறம் அடிப்படை என்பதை இந்த கதை உணர்த்துகிறது. விதியை மதியால் வெல்லலாம். அந்த காலத்து மனிதர்கள் உறவை, நல்ல உணவு பழக்கங்களை, கடின உழைப்பை நம்பினார்கள். ஒரு பழங்கால அம்மாவும் அறிவியலை நம்பும் மகனுக்கும் இடையே நடக்கும் கதை. ராதா தன் அறம்சார்ந்த கொள்கைகளை மகனிடம் கூறுவாள். தந்தை, தாய் சொல்வதை எத்தனை குழந்தைகள் கேட்கிறார்கள்? ஆனால் எதிர்திசை இருப்பவர்கள் நடுவில் ஈர்ப்பும், விவாதமும் இருக்கும். எதிர், எதிர்திசையில் ஈர்ப்பு இருக்கும். அப்படிதான் முரண்பட்ட கருத்து உள்ளவர்கள் நடுவில் நடக்கும் சம்பாஷனைகளும் தர்க ரீதியாக இருக்கும்.. ராதா, கிருஷ்ணனுக்கு ஒரே மகன். அவன் பெயர் பிரசாத். சின்ன வயசிலேயே குடும்ப விஷயங்களில் அவன் பஞ்சாயத்து அதிகம் இருக்கும். அவன் மற்ற குழந்தைகளை விட அதிகம் யோசிக்கறானோ என்று தாய் தந்தைக்கு சந்தேகம்.

பிரசாத்: சித்தி இன்னைக்கு மௌன விரதமாம். நீ வெளியில போயிருக்கேன்னு செய்கைல சொன்னாங்க. எனக்கு புரியல. அப்புறம் பேப்பர்ல எழுதி காமிச்சாங்க. நான் பயந்தே போயிட்டேன்.

அம்மா: ஆமாம்டா, திடீர்னு என் தோழி சிதம்பரத்துல என்னோட ஸ்கூல் படிச்சவ, சென்னை வந்திருக்கேன்னு போன்ல சொன்னா. வீட்டுக்கு வர முடியாது, ராதா. டீ. நகர் வருவியான்னு சொன்னா. அவ சொந்தகாரங்க வீட்டுல இருக்கா. கால்ல வெந்நீர ஊத்திக்கிட்ட மாதிரி பறக்கறா.என்ன பன்றது? பால்ய சிநேகிதம். மறக்க முடியலை. இப்போ பழைய கதை எல்லாம் புதுசா இருக்கு.

பிரசாத்: எதிர்பார்காம தோழி கூப்பிட்டா நீ சித்திகிட்ட சொல்லி வேற யாரையாவது வீட்டுல இருக்க சொல்லவேண்டியதுதானே?

அம்மா: இப்போ என்ன குறைஞ்சுட்டே? ஒரு நாள் கொஞ்சம் அனுசரிக்ககூடாதா?

பிரசாத்: அம்மா, ஒரு விஷயத்துல இல்ல பல விஷயத்துல நீ தேவையில்லாம கஷ்டப்படறே. உன் வயசுக்கு நீ தேவையானதை யோசி.

அம்மா: தோழி தேவையில்லையா இல்லை சித்தி தேவையில்லையா?

பிரசாத்: அம்மா, சித்தியோட மௌன விரதம் தேவையில்லாதது.

அம்மா: நல்ல விஷயத்தை யாரு செஞ்சாலும் உனக்கு பிடிக்கறது இல்லடா. என்ன குழந்தையோ நீ?

பிரசாத்: இயற்க்கை, அறிவியல் இதை பத்தில்லாம் நீ யோசிக்கவே மாட்டியா?

அம்மா: அன்பு, அடக்கம் வாழ்க்கைக்கு முக்கியம்ன்னு நீ யோசிக்க மாட்டியோ?

அப்பா: அம்மா, பையன் தர்கம்பண்ண ஆரம்பிச்சுட்டீங்களா? ஒரு தம்பியோ, தங்கையோ இருந்து இருந்தா அம்மாக்கு பிரச்சனை இல்லாம இருந்திருக்கும்.

அம்மா: இது குடும்பம். இங்க நவகிரகம் மாதிரி இருக்ககூடாது.  சூரியன், சந்திரன் மாதிரி இருக்கனும். வேற திசையில் பார்த்தாலும் குடுத்தல் வாங்கல் இருக்கனும். படுக்காம இருக்க கூடாது.

பிரசாத்: உன் புரிதல் தப்பும்மா.

அப்பா: சரி, எல்லாரும் வேலையை பாருங்க.
இப்படித் தான் ராதா மற்றும் கிருஷ்ணனின் வீடு விவாதங்களுடன் இருக்கும். சில பேர் கிளி மாதிரி இருப்பாங்க. பேசினதையே பேசிட்டு. சில பேர் பருந்து மாதிரி இருப்பாங்க. உயர பறக்கனும் பலசாலியா இருக்கனும்ன்னு நினைப்பாங்க. இவங்க வீடு இரண்டாம் ரகம்.

ராதா: இன்னைக்கு பெளர்ணமி அம்பாளுக்கு விசேஷம் கோயிலுக்கு போகனும். ஏங்க வீட்டை பாத்துக்கோங்க.நான் போயிட்டு வந்துடறேன். நீங்க சாயங்காலம் கோயிலுக்கு போங்க.

பிரசாத்: சூரிய ஒளி, சந்திர ஒளி மட்டும் நம்பி இருந்த காலத்துல பெளர்ணமி, அம்மாவாசை, சித்திரை மாசம், எல்லாம் கொண்டாடினாங்க. இப்போதான் அறிவியல் வளர்ந்து வைட் கண்டுபிடிச்சுட்டோமே. இப்போ எதுக்கு இந்த கொண்டாட்டம்.

ராதா: உன்னோட பேச எனக்கு தெம்பு வேணும் கோயிலுக்கு போயிட்டு பிரசாதம் வாங்கி சாப்டுட்டு வர்றேன். என்றாள் ராதா.
கணவனிடம் சொல்லிவிட்டு ஓட்டமும் நடையுமா கோயிலுக்கு சென்றாள். தன் மகனுக்கு நல்ல புத்தி குடுக்கனும்ன்னு வேண்டினாள் ராதா.
பிரசாத் பத்தாம் வகுப்பு படிக்கிறான். படிப்பிலும், பேச்சிலும் அவன் திறமைசாலி.
பிரசாத் ஒருநாள் பள்ளி பாடங்களை படித்துக்கொண்டு இருந்தான்.  ராதா சொன்னாள் சத்தமாக படி கேட்க நல்லா இருக்கு.

பிரசாத்:. சத்தமாக படித்தால் ஒரு வேகம் வருது. படித்தது மனனம் ஆகுது. ஆனால், மௌனமாக படிக்கும்பொழுது அதன் பொருள் புரியுது.

ராதா: உன் மொழி அழகாக உள்ளது.
பிரசாத்: அம்மா சொற்சுவையை நீ விரும்பறே. பொருள் சுவையை நான் விரும்பறேன். ஆழமா சிந்திக்கற பழக்கம் உனக்கு இல்லை.
கிருஷ்ணன்: அம்மாவ குறைசொல்லாட்டி உனக்கு தூக்கம் வராதோ? அவ மனசை நீ ரசிக்க கத்துக்கோ.

பிரசாத்: அதுக்குதான் நீங்க இருக்கீங்களேப்பா.
அவன் ஒரு வித்யாசமான மகனாக இருந்தான்.
அன்பை விட விமர்சனங்களை தான் அதிகம் யோசித்தான்.
நேர்மையாக இருப்பதைவிட குணங்களை புரிந்து நடப்பது முக்கியம் என்று அவனுக்கு புரிந்தது. நட்பாக இருப்பது நம் வெற்றியை தக்கவைத்து கொள்ள உதவும் என அவன் புரிந்துகொண்டான். அந்த நட்பு தான் அறம் என்று அவன் புரிந்து கொண்டான். நேர்மை, நட்பு என்ற இரண்டு வாழ்க்கை பாடங்களை தன் தாய் மூலமாக அவன் புரிந்து கொண்டான்.
எனக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்கும் மனிதனுக்கும் என்னால் யாரையும் கொல்லும் பலம் உள்ளது என்று நினைக்கும் சிங்கத்துக்கும் ஒரு வேறுபாடும் இல்லை. பலவீனம் இருக்கும் பொழுதுதான் உதவி, நட்பு புரியும். அந்த பலவீனம் அறத்தை, அன்பை வளர்க்கிறது.
பிரசாத் பள்ளியில் நடத்திய நீச்சல் போட்டியில் கலந்து கொண்டான்.
பயிற்சி செய்து போட்டியில் வெற்றி அடைந்தான். மாநில அளவிலான போட்டியில் தேர்வானான். பயிற்ச்சி செய்யும்பொழுது அவன் வெற்றி பெற கூடாது என்று சிலர் நினைத்தனர்.
அவன் உணவில் மயக்கமருந்தை கலந்துவிட்டனர். நீச்சலடிக்கும்பொழுது மயங்கியதால் அவனால் சரியாக மூச்சுவிடமுடியவில்லை. எலும்பு முறிவும் ஏற்பட்டது. அந்த சமயத்தில் அவன் தோழி சுசீலா ஒரு நல்ல துணையாக இருந்தாள். அவன் தாய் ராதா மற்றும் தந்தை கிருஷ்ணனிடம் இருந்த உண்மையான அன்பை உணர இந்த பலவீனமான சூழ்நிலை ஏதுவாக இருந்தது.

சுசீலா: நட்பு என்னும் போர்வையில் பகை இருக்கும். அறிவியல் என்ற போர்வையில் வியாபார நோக்கு இருக்கும். நாம தான் புரிஞ்சுக்கனும்.

பிரசாத்: என் அம்மா உணர்வுபூர்வமா சிந்திக்கறாங்க. புதுமைங்கற பேர்ல நான்தான் அப்பாவியா இருக்கேன். அம்மா சொல்ற வழில நடந்திருந்தா எனக்கு இந்த அளவு கஷ்டம் வந்திருக்காது.

சுசீலா: அறிவு, திறமை, அழகு மூணுமே ஆபத்தானது, விலைமதிக்க முடியாதது. அனுபவ அறிவு தான் சில உண்மைகளை நமக்கு புரிய வைக்கிறது.

பிரசாத்: நான் இந்த போட்டிக்காக பயிற்ச்சி செய்யும் பொழுதே அம்மா சொன்னாங்க. உன் மேல பொறாமை படுவாங்க. நீ வெளிப்படையா பேசாதேன்னு. அம்மா தேவையில்லாம யோசிக்கறாங்கன்னு நான் நினைச்சேன்.
சுசீலா சூடான பாலை பிலாஸ்கில் இருந்து ஊற்றி குடுத்தாள். பள்ளி பாடங்கள் பற்றி சொன்னாள்.

ராதா: ஒரு மாசம் கழிச்சு வந்துடுவான். நீ வந்து பேசறது அவனுக்கு ஆறுதலா இருக்கு கண்ணா.

சுசீலா: ஆன்ட்டீ, அவனுக்கு பத்தாம் வகுப்பு பாடம் தண்ணீ குடிச்ச மாதிரி. அவன் நல்லா வருவான் என்றாள்.
அவள் சென்றபிறகு பிரசாத் அம்மாவிடம் பாவ மன்னிப்பு கேட்டான். அவன் மனம் பேசியது.

பிரசாத்: கண்திருஷ்டி, பெறாமை, பேராசை, கர்வம் இதை பற்றி நீ சொல்லும்பொழுது, இது இயற்க்கையானது இல்லை அறிவியல் ரீதியானது இல்லைன்னு நான் நினைச்சேன்.

அம்மா: தேள், பாம்பு ஆசைபட்டு கடிப்பதில்லை. அது அதன் குணம். நல்லது, கேட்டதை இயற்க்கை படைச்சிருக்கு. அதை அறம், பண்பு முதலிய குணங்களை கொண்டு நாம தான் கண்ணா புரிஞ்சிக்கனும்.
நீ வாட்டசாட்டமா அழகா இருக்கே. அப்பாவும் நீயும் அண்ணன், தம்பி மாதிரி இருக்கீங்கன்னு நிறைய பேரு சொன்னாங்க. அந்த திருஷ்டி தான் டா உன்னை படுக்க வச்சிடுச்சு என்றாள்.
அம்மா வார்த்தைகளில் இருந்த “உண்மை” பிரசாதிற்க்கு புரிந்தது.

பிரசாத்: நீ சொல்லற விஷயம் உண்மையானது. ஆனால், நீ உணர்ச்சி வசப்பட்டு பேசற மாதிரி என் கண்ணுக்கு தெரிஞ்சது. என்னை மன்னிச்சிடு அம்மா. உன் அனுபவம் எனக்கு இப்போ தான் புரியுது.
ராதா: என் அனுபவம் அறமாக பக்தியாக மாறி விட்டது. உன் அறிவுக்கு என் மனசு புரிஞ்சது எனக்கு சந்தோசமா இருக்கு பிரசாத். படிப்பு வேற வாழ்க்கை பாடம் வேற. நீ வாழ்க்கையை புரிஞ்சிக்க என்னோட கையை புடிச்சிட்டு வா.

பிரசாத்: சரி அம்மா.
ராதா மகனை கட்டி பிடித்து முத்தம் இட்டாள்.
படிப்பறிவு உள்ளவர்கள் அறம் மற்றும் அறிவியலை சிந்திப்பார்கள். படிப்பறிவு இல்லாதவர்கள் அறம் பற்றி சிந்திப்பார்கள். படிப்பறிவு இல்லாதவர்கள் சிந்தனையிலும் வாழ்க்கையின் நிஜங்கள் தெளிவாக இருக்கும். “பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு”.

சிறுகதையின் ஆசிரியர்
ரா.ஷர்மிளா,

ஆதம்பாக்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here