பத்திரிகைகள் சுதந்திரத்தோடும் பொறுப்போடும் நடந்து கொள்ள வேண்டும். நமது நாட்டில் அமைந்த முதல் பத்திரிகைக் குழு (Press commission) நாட்டிலுள்ள பத்திரிகைகளின் நிலையையும் தரத்தையும் பற்றி ஆராய்ந்தது. சில நன்கு அமைந்த செய்தித்தாட்கள் உயர்ந்த தரத்தோடு வி செயல்பட்டாலும், பெரும்பாலான பத்திரிகைகள் தங்களது விற்பனையைக் கூட்டும் வாணிபநோக்கில் ‘தரக்குறைவாகவும்’ பண்பற்ற முறையிலும் தனிமனிதர்களைத் தாக்கும் வகையிலும் மஞ்சள் இதழியல் ‘போக்கிலும்’ எழுதுவதாகச் சுட்டிக்காட்டியது. பத்திரிகை மன்றம் (PRESS COUNCIL)
பத்திரிகைக் குழு “பத்திரிகைகளின் சுதந்திரத்தைக் கட்டிக் காக்கவும், இதழியல் தொழிலில் ஈடுபட்ட அனைவரிடமும் பொறுப்புணர்ச்சியையும் தொண்டு மனப்பான்மையையும் வளர்க்கவும்” ஒரு பத்திரிகை மன்றத்தை (Press council) அமைக்க வேண்டுமென்று பரிந்துரைத்தது. ஸ்வீடனில் 1916இல் முதல் தடவையாக பத்திரிகை மன்றத்தை அமைத்தனர். இதனைப் பின்பற்றி உலகில் பல்வேறு நாடுகளிலும் பத்திரிகை மன்றங்களை அமைத்திருக்கின்றனர். இப்பொழுது 40 நாடுகளில் பத்திரிகை மன்றங்கள் உள்ளன.
சட்டப்பின்புலம்
நமது நாட்டில் முதல் பத்திரிகைக் குழுவின் (Lok ) பரிந்துரையைத் தொடர்ந்து, நாடாளுமன்ற மக்களவையில் sabha) பத்திரிகை மன்ற மசோதாவை’க் (Press Council Bill) கொண்டு வந்தனர். ஆனால் பொதுத் தேர்தலுக்காக 1957 ஏப்ரலில் நாடாளுமன்றம் கலைக்கப் பெற்றதால் மசோதா சட்டமாகாமல் செயலற்றுப் போனது.
எட்டாண்டுகளுக்குப் பிறகு தேசிய ஒற்றுமை மன்றம் (National Integration Council), பத்திரிகை மன்றம் அமைக்க வேண்டிய தேவையை வலியுறுத்தியது. இதன்படி 1965-இல் ‘பத்திரிகை மன்றச் சட்டத்தை’ (The Press Council Act) நிறைவேற்றியது. இந்திய பத்திரிகை மன்றத்தை 1966 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் நாள் அமைத்தனர். இதன் தலைவராக நீதிபதி ஜே.ஆர். மதோல்கார் (J.R. Madhoíkar) பொறுப்பேற்றார். பத்திரிகை மன்றத்தின் அமைப்பினில் சிறிது மாற்றம் செய்து, அதன் காலத்தை நீட்டிக் கொண்டிருந்தனர். 1975இல் நாட்டில் நெருக்கடி நிலையை அறிவித்தபொழுது குடியரசுத் தலைவர் 1975 டிசம்பர் 8-இல் ஓர் ஆணை பிறப்பித்து,1976 ஜனவரி 10 முதல் பத்திரிகை மன்றத்தை நீக்கினார். பத்திரிகை மன்றம் திறமையாகச் செயல்படவில்லை என்று காரணம் கூறி ‘ பத்திரிகை மன்றம் (நீக்குதல்) சட்டத்தை’ (The Press Council Repeat Act) 1976இல் நிறைவேற்றினர்.
நெருக்கடி நிலை நீங்கிய பிறகு. 1978-இல் பத்திரிகை மன்றச்சட்டத்தை மறுபடியும் கொண்டு வந்தனர். இந்தச் சட்டம் 1979 மார்ச்சு ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இப்பொழுது பத்திரிகை மன்றத் தலைவராக நீதிபதி ஏ.என்.சென் (Justice A N sen) இருக்கின்றார்.
அமைப்பு முறை
பத்திரிகை மன்றத்தில் ஒரு தலைவரும் 28 உறுப்பினர்களும் இருப்பார்கள். உறுப்பினர்களில் 20 பேர் பத்திரிகையாளர்களாகவும் 5 பேர் நாடாளுமன்றத்தைச் சேர்ந்தவர்களாகவும், 3 பேர் கல்வி, அறிவியல், சட்டம், இலக்கியம், பண்பாடு ஆகிய துறைகளில் சிறப்பறிவு பெற்றவர்களாகவும் இருப்பார்கள்.
பத்திரிகை மன்றத்தின் தலைவரை, நாடாளுமன்ற மேலவைத் தலைவர், மக்களவைத் தலைவர், பத்திரிகை மன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப் பெற்ற ஓர் உறுப்பினர் ஆகியவர்களைக் கொண்ட குழு தீர்மானிக்கும். பத்திரிகை மன்றம் சில நீதிமன்றப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டியிருப்பதால் உயர்மட்ட நீதிமன்ற (Supreme court) நீதிபதிகளையே பொதுவாக பத்திரிகை மன்றத் தலைவராக நியமிக்கின்றனர்.
மன்றத்தின் பணிகள்
பத்திரிகையின் சுதந்திரத்தைப் பேணிக்காப்பதும், செய்தித்தாட்கள், செய்தி நிறுவனங்களின் தரத்தைக் காத்து மேம்படுத்துவதும் பத்திரிகை மன்றத்தின் தலையாய் நோக்கமாதலால், அதனை நிறைவேற்றும் வகையில் மன்றம் பணிகளை மேற்கொள்கின்றது.
மன்றம், செய்தித்தாட்களும், செய்தி நிறுவனங்களும் உயர்ந்த தொழில் தரத்தை நிலைநாட்டும் வகையில் பின்பற்ற வேண்டிய நெறி முறைக் கோட்பாடுகளை உருவாக்கித் தர வேண்டும். செய்தித்தாட்களும் செய்தி நிறுவனங்களும் சுதந்திரமாகச் செயல்பட உதவுவதும் மன்றத்தின் பணியாகும். செய்தித் தாட்களும் செய்தி நிறுவனங்களும் இதழியலாளர்களும் பொது நல நாட்டத்தோடும், பொறுப்போடும் உரிமை உணர்வோடும் பணி செய்யத் துணை செய்ய வேண்டும். இதழ்களை வெளியிடுவதில் ஈடுபட்டுள்ள எல்லாப் பிரிவினரிடமும் உருவாக்க முயல வேண்டும்.
மன்றம், பத்திரிகைகளின் அமைப்புமுறை, செய்தித்தாட்கள், செய்தி நிறுவனங்கள் ஆகியவற்றின் உடைமை குவிதல் நிலை ஆகியவற்றை ஆராய்ந்து, பத்திரிகைகள் சுதந்திரமாகச் பரிந்துரைகளைச் செய்ய வேண்டும். வெளிநாட்டு உதவிகளைப் பெறும் செயல்பட வேண்டிய மதிப்பிட்டுக் கூறும் பணியும் இந்த மன்றத்தினுடையதாகும்.
செயல்பாடு
பத்திரிகை மன்றம் அதனிடம் வரும் குற்றச்சாட்டுக்களை விசாரித்துத் தீர்ப்பளிக்கின்றது. வரையறுத்த அதிகாரத்திற்குள் 1966 1981 வரை இம்மன்றம் 800 குற்றச்சாட்டுகளை விசாரித்துள்ளது. இவற்றில் 214 குற்றச்சாட்டுகள் பத்திரிகை சுதந்திரம் தொடர்பானவைகளும் மத்திய மாநில அரசுகளின் மீது பத்திரிகைகள் கொண்டு வந்தவைகளுமாகும். 566 குற்றச்சாட்டுகள் பத்திரிகைகளின் மீது தனிமனிதர்களும், நிறுவனங்களும், மத்திய, மாநில முடிவுகளை அரசுகளும் கொண்டு வந்தவை. மன்றத்தின் முடிவுகளை பல செய்தித்தாட்களில் வெளியிடுகின்றனர்.
பத்திரிகை மன்றம் இதழியலாளர்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை வரையறுத்துக் கூறவில்லை. காலப்போக்கில் வருகின்ற வழக்குகளை விசாரித்துக் கூறுகின்ற தீர்ப்புகளின் அடிப்படையில் நெறிமுறையினை உருவாக்க இயலுமென்று கருதுகின்றது. பத்திரிகைகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் பத்திரிகை மன்றம் ஒரு பாலமாக விளங்குகின்றது.
மதிப்பீடு
பத்திரிகை மன்றத்திற்கு இதழ்களைக் கட்டுப்படுத்த, தண்டிக்க போதுமான அளவு அதிகாரம் வழங்கப்பெறவில்லை. ஆதலால் அவை திறமையாகப் பணிபுரிய இயலவில்லை என்று கருதுகின்றனர். பத்திரிகை மன்றத்தை, “இது ரப்பர் பற்களைக் கொண்ட காகிதப் புலி’ ; ” தெளிவற்ற அதிகாரமற்ற ஓர் அமைப்பு” என்றெல்லாம் தொடக்க காலத்தில் வர்ணித்தனர். ஆனால் பத்திரிகை மன்றம் இப்பொழுது ஆற்றல் பெற்று வளர்ந்து வருகின்றது. இதன் தேவையை எல்லாத்தரப்பினரும் உணர்ந்துள்ளனர். பத்திரிகை சுதந்திரத்தையும் தரத்தையும் காக்கக் கூடிய நிறுவனமாக பத்திரிகை மன்றம் இருப்பதால், இதனை வலுவானதாக்கி, திறமையாகச் செயல்படத்தக்க சூழ்நிலையை உருவாக்கித் தருவது இந்தியப் பத்திரிக்கை வளர்ச்சிக்குத் துணை செய்யும்.
பத்திரிகை மன்றம் (Press council)
நமது நாட்டில் பத்திரிகை மன்றத்தை அமைத்த பொழுது, அது, “செய்தித்தாட்களும, செய்தி நிறுவனங்களும், செய்தியாளர்களும் உயர்ந்த தொழில் தரத்தை நிலைநாட்டும் வகையில் பின்பற்ற வேண்டிய ‘நடத்தைக் கோட்பாட்டை’ (Code of Conduct) உருவாக்கித் தர வேண்டும்,” என்று எதிர்பார்த்தனர். ஆனால் பத்திரிகை மன்றமோ, “காலப்போக்கில்தான அறக்கோட்பாட்டை உருவாக்க இயலும்,” என்று கருதியது
1966 இல் பத்திரிகை மன்றம் செய்தித்தாட்கள் பின்பற்றத் தக்க சில வழிமுறைகளைத் தொகுத்து, 10,000 செய்தித்தாட்களுக்கும் இதழ்களுக்கும் அனுப்பியது. அந்த தொகுப்பில், சமுதாயத்தின் உண்மையான, சட்டத்திற்குட்பட்ட தேவைகளையும் குறைகளையும் எடுத்துரைக்கும் இதழ்களுக்கும் உரிமையை ஏற்றுக் கொண்டு ஆனால் கீழ்க்கண்டவற்றை விலக்க வேண்டும் என்று தொகுத்துக் கூறுகின்றது
♣சாதி தொடர்பான நிகழ்ச்சிகளையோ விவரங்களையோ மிகைப்படுத்தியோ, சிதைத்தோ கூறுதல்; உண்மைகளைப் போல சரி பார்க்காத வதந்திகளையோ ஐயப்பாடுாடுகளையோ ஊகங்களையோ பரப்புதல்; அவற்றைப் பற்றி விமாசித்தல்.
♣இலக்கிய நயத்தோடு அமைய வேண்டுமென்றோ எதுகை மோனைக்காகவோ, அழுத்தம் தருவதற்காகவோ செய்திகளையோ, கருத்துக்களையோ வெளியிடும் பொழுது,பண்படாத, கட்டற்ற மொழிநடையைப் பயன்படுத்துதல்;
♣ உண்மையாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், குறைகளைத் தீர்க்கும் வழிமுறையாக, ஆத்திரப்படும் சூழ்நிலையில் கூட வன்முறைக்கு ஆக்கமும் ஊக்கமும் தருதல்.
♣ஒரு குறிப்பிட்ட சமுதாயம் அல்லது சாதியின் உறுப்பினர்கள் என்பதற்காக, அதுவும் குறிப்பாக அவர்களது நடத்தைப்பற்றிக் குற்றச்சாட்டுகள் இருக்கும் பொழுது, தனிமனிதர்களையோ, சமுதாயங்களையோ குதர்க்கமாகவோ, பொய்யாகவோ தாக்கி எழுதுதல்;
♣ பல்வேறு சமுதாயங்களின் உறுப்பினர்கள் தற்செயலாக ஈடுபட்டிருக்கும் நிகழ்ச்சிகளுக்குத் தவறாக சாதி வண்ணம் பூசுதல்;
♣சாதிகளுக்கிடையில் வெறுப்பையோ,கெட்டஎண்ணங்களையோ,அவ நம்பிக்கை உணர்வையோஏற்படுத்தக் கூடியவற்றிற்கு அழுத்தம் கொடுத்தல்;
♣உண்மைக்குப் புறம்பானவற்றை அச்சப்படுத்தும் வகையில் வெளியிடுதல்; சாதிகள், வட்டாரங்கள், மொழிப் பிரிவினருக்கிடையில் கசப்பான தொடர்புகளை ஏற்படுத்தக் கூடிய செய்திகள், கருத்துக்கள் பற்றி வெறி ஏற்றும் விமரிசனங்களை வெளியிடுதல்;
♣ சமுதாய ஒற்றுமையைப் பாதிக்கும் செய்திகளுக்கு, உணர்ச்சியைத் தூண்டுவதற்காக நடந்தவற்றை மிகைப் படுத்தியோ, பெரிய செய்தித் தலைப்புகளோடோ வேறுபட்ட எழுத்துக்களில் அச்சிட்டோ வெளியிடுதல்;
♣பல்வேறு மதங்களைப் பற்றியோ, நம்பிக்கைகளைப் பற்றியோ, அவற்றின் நிறுவனங்களைப் பற்றியோ மரியாதையற்ற, மட்டம் தட்டுகின்ற, கேவலப்படுத்துகின்ற கருத்துரைகளைக் கூறுதல்.
நிறைவுரை
இதழ்கள் தங்களது வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் சில அறவிதிகளை ஏற்றுச் செயல்படுதல் தேவையாகும். அறவழி நிற்கும் இதழ்கள் தான் மக்களின் மதிப்பையும், நம்பிக்கையையும் பெற்றுச் சிறக்கும்.
நன்றி
இதழியல் கலை – டாக்டர் மா.பா.குருசாமி