Abstract
If we saw the basic common elements of the folk, their beliefs and customs were unwavering. Their feelings and their beliefs were inseparable. They believed that some of the events in human life were unacceptable when the human mind was unacceptable. Beliefs have been created by the people and have been spreading from one generation to another. From birth to death, they lived with many beliefs.
முன்னுரை
நாட்டுப்புற மக்களின் அடிப்படை பொதுக் கூறுகளாக பார்த்தோம் என்றால் அவர்களின் நம்பிக்கைகளும் பழக்க வழக்கங்களும் அசைக்க முடியாத ஒன்றாக இருந்தது. அவர்களின் உணர்வுகளும் அவர்களின் நம்பிக்கைகளும் பிரிக்க முடியாத ஒன்றாக இருந்தது. மனித வாழ்வில் ஏற்படும் சில நிகழ்ச்சிகளுக்கு காரணம் கற்பிக்க இயலாத பொழுது மனித மனமானது சிலவற்றை ஏற்றுக்கொள்ளாத இருந்தது அதிலும் ஒரு நன்மை தான் என நம்பிக்கை கொண்டிருந்தனர். நம்பிக்கைகள் மக்களால் உருவாக்கப்பட்டு காலம் காலமாக ஒரு தலைமுறைகளிடமிருந்து மற்றொரு தலைமுறைக்கு பரவி இருந்தது. பிறப்பு முதல் இறப்பு வரை பல நம்பிக்கைகளை கொண்டு வாழ்ந்து வந்தனர்.
நாட்டுப்புற மக்களின் நம்பிக்கைகள்
♣ ஆண்களுக்கு வலது கண் துடித்தால் நல்லது இடது கண் துடித்தால் நல்லதல்ல
♣பெண்களுக்கு இடது கண் துடித்தால் நல்லது வலது கண் துடித்தால் நல்லதல்ல
♣சிரிக்கும் பொழுது இடது கன்னத்தில் குழி விருந்தால் அதிர்ஷ்டம்
♣வாழை மரம் தெற்கு நோக்கிக் குலை தழுதல் கூடாது
♣பயணம் செய்யும்பொழுது யானையைக் காண்பது நல்லது
♣தலையணை மீது உட்காரக்கூடாது
♣சுப காரியம் போது ஒற்றைத் தும்பல் ஆகாது
♣கர்ப்பிணிகளின் தலைக்கு மேலே கோழி பறக்க கூடாது
♣வெள்ளியன்று சுமங்கலிகள் பிறர் மனைவியை தாக்குதல் கூடாது
♣கம்மல் வளையல் போன்ற நகைகளை சுமங்கலிகள் இரவில் கழட்டுதல் கூடாது
♣சுப காரியங்கள் பேசும் பொழுது கோவில் மணி அடித்தால் நல்லது.
♣வெள்ளிக்கிழமை கண்ணாடி வளையல் உடைதல் கூடாது
♣கர்ப்பிணிகள் பெண்கள் கடல் தாண்டி போகக்கூடாது மலையேறும் கூடாது
♣மனைவி கர்ப்பமாக இருக்கும் பொழுது கணவன் மலை ஏறக்கூடாது.
♣பிணத்தின் பின் செல்லுதல் கூடாது
♣அடுப்புக்கரி விறகுகளை வெள்ளிக்கிழமையில் வாங்க கூடாது
♣ஊசி வெள்ளிக்கிழமையில் கடையில் விற்கக் கூடாது
♣ஈர ஆடைகளை அணிந்து கொண்டு நல்ல காரியங்களை செய்யக்கூடாது
♣விக்கலை நிறுத்த விக்கி கொண்டிருப்பவர் அதிர்ச்சி அடையும்படி பொய்யான தகவலை சொல்வார்கள்
♣துக்கம் விசாரித்த வீட்டிற்கு வருபவர்களை வாருங்கள் என வரவேற்க கூடாது
♣துக்க வீட்டில் இருந்து புறப்படும் போது திரும்ப (அ) சென்று வருகிறேன் என சொல்லக்கூடாது
♣நம் செருப்புகளையும் ஆடைகளையும் புனித தளங்களில் தொலைத்து விட்டால் நம் பாவங்கள் போகும்
♣அன்னத்தை வீசிய கூடாது
♣அமாவாசை நாளில் முடி வெட்டக்கூடாது
♣பயணம் ஏற்படும் போது ரத்தக்காயம் ஏற்பட்டால் பயணத்தை தொடரக்கூடாது
♣தூரத்தில் உள்ள உறவினர் துன்பம் ஏற்பட்டால் நமக்கு நெஞ்சம் படபடக்கும்
♣புத்தாடைகளை மஞ்சள் தடவி அணிதல் வேண்டும்
♣சுமங்கலி பெண்களின் நல்ல புடவையைக் குறுக்கே கிழிக்கக் கூடாது
♣வெள்ளிக்கிழமைகளில் குத்து விளக்கை தேய்த்து கழுவ கூடாது பூஜை அறை சுத்தம் செய்யக்கூடாது
♣பசு மாடு ஆடு ஆகியவற்றை காலால் உதைக்கக் கூடாது
♣தலைப்பிள்ளையை தத்து கொடுக்க மாட்டார்கள்
♣பயணம் செய்யும்போது காக்கை எச்சம்மிடக்கூடாது
♣வவ்வால் வீட்டுக்குள் பறக்க கூடாது. தேன்கூடு வீட்டுக்குள் கட்டினால் ஆகாது
♣இரவில் கிணற்றில் நீர் எடுக்கக் கூடாது
♣பயணம் செய்யும்போது நீர் நிறைத்து வருதலும் திருநீர் அணிந்து வருதலும் நல்லது
♣பிள்ளையார் சாமி திருடிக் கொண்டு வந்து வைக்கலாம் நல்லது
♣சாமி வணங்கும்போது சாமி மீது உள்ள பூ கீழே விழுந்தால் நல்லது நடக்கும்
♣உப்பும் நீரும் வெள்ளிக்கிழமை வாங்கினால் தனம் பெருகும்
♣பயணம் செய்யும்போது கருடன் வலப்பக்கத்தில் இருந்து இடப்பக்கம் செல்வது நல்லது
♣புது பெண்ணை ஆடி மாசம் கணவன் வீட்டுக்கு அனுப்பி வைக்க மாட்டார்கள்
♣வீட்டில் மகாபாரதம் படித்தால் சண்டை உண்டாகும்
♣தலையில் இரட்டைச் சொல்லிக் கொண்டவனுக்கு அதிர்ஷ்டம் இல்லாதவன்
♣வியாபார நிறுவனங்களில் கல்லாப்பெட்டியில் உட்கார்ந்து தாளம் போடக்கூடாது
♣மாலை நேரத்தில் விளக்கு ஏற்றியவுடன் யாரும் அழுக கூடாது வீட்டில் குத்து விளக்கை வலது புறம் பார்த்து ஏற்றினால் நல்லது தெற்கு புறம் ஏற்றக்கூடாது
♣சுவாமி விளக்கிற்கு கடலை எண்ணெய் ஊற்றக்கூடாது
♣அரிசியை அளந்து போடும் முன் லாபம் என்று சொல்லி அழைப்பார்கள்
♣குலதெய்வ வழிபாட்டு முறை சுப காரியங்களை தொடங்குவது நல்லது
♣விபூதியை கடையில் வாங்கி மற்றவர்களுக்கு இலவசமாக கொடுக்க கூடாது
♣விரத நாட்களில் அசைவம் உண்ணக்கூடாது
♣வீட்டின் வாயில் படியில் நின்று பணத்தை தரக் கூடாது
♣கிராமத்தில் மழை வர வேண்டும் என கழுதைக்கு திருமணம் செய்து வைப்பார்கள்
♣குழந்தை இல்லாதவர்கள் அரச மரத்தை சுற்றி வருவார்கள்
♣வீட்டில் ஆண்டிக் கோலம் துர்க்கை அம்மன் காளி ஆகி படங்களை வைக்கக் கூடாது
♣பணம் கொடுக்கும் போது அது தவறி கீழே விழுந்தால் லாபம் என்று நினைப்பார்கள்
♣நல்ல காரியங்களுக்கு போகும் போது மூவராக சேர்ந்து போகக்கூடாது
♣வைகுண்ட ஏகாதசி என்று இறந்தவர்களுக்கு சொர்க்கம் கிடைக்கும் என்பது நம்பிக்கை
♣புது பானை உடைந்தால் அபசகுனம் நாய் ஊளையிட்டால் அந்த பகுதியில் யாருக்காவது மரணம் நேரிடும்
♣தொடையைத் தட்டிக் கொள்ளுதல் ஆகாது
♣தாழ்ப்பாளை ஆற்றினால் வீட்டில் சண்டை வரும்
♣செவ்வாய் வெறும் என்று கூறுவார்கள்
♣திருமணம் ஆகி வரும் மணப்பெண் புகுந்த வீட்டில் வலது காலை எடுத்து வைத்து வர வேண்டும்
♣படுத்திருப்பவர்களை தாண்டக்கூடாது
♣வாசப்படியில் நின்று கொண்டு பொருளை வாங்கவோ கொடுக்கவும் கூடாது
♣சாப்பிட்ட கையால் எழுதி எடுக்கக் கூடாது
♣உள்ளங்கையில் சோறு போடாமல் சாப்பிட வேண்டும்
♣சாப்பிட்ட இலை தட்டு கை ஆகியவை உலர விடக்கூடாது
♣கரப்பான் பூச்சி வீட்டில் அதிகம் இருந்தால் வீட்டில் செல்வம் பெருகும்
♣உடைந்த கண்ணாடியில் முகம் பார்க்கக் கூடாது
♣புண்ணியம் செய்தவருக்கு தான் சிவலோகம் கட்டும்
♣குளவி கூடு கட்டி இருந்தால் வீட்டில் யாரேனும் கருத்தரிப்பார்கள்
♣பசுவை அடித்தால் பெரும்பாவம் பெண்கள் நெற்றியில் பொட்டு இல்லாமல் இருக்க கூடாது
♣வீட்டில் முளைப்பாலிகை செழிப்பாக வளர்ந்தால் வாழ்வு செழுமையாக இருக்கும்
♣கருவுற்றிருக்கும் பெண்கள் சூரிய சந்திர கிரகணத்தின் போது காய்கறிகள் நறுக்கக்கூடாது
♣உணவு சாப்பிடக்கூடாது ஞாயிற்றுக்கிழமை செவ்வாய்க்கிழமை மருந்து சாப்பிட ஆரம்பிக்கலாம்
♣வந்திருக்கும் விருந்தினருக்கு விருந்தளிக்கும் போது கீரை சமைத்து போட்டால் விருந்தினர் ஊர் திரும்ப வேண்டும் என்று பொருள்
♣விருந்தினருக்கு வீட்டில் பாவக்காய் செய்யக்கூடாது
♣புண்ணியம் செய்தவருக்கு சிவலோகம் கிட்டும்
♣தீமை செய்தவருக்கு இறந்த பிறகு நரகம் செல்வார்கள்
♣பசுவை அடித்தால் பெரும்பாவம்
♣குயிலின் கூட்டைக் கலைத்தல் பெரும்பாவம்
♣குழந்தைகளுக்கு குலதெய்வத்தின் பெயரை வைத்தால் எந்த விதத் தீங்கும் வராது என நம்புவார்கள்
♣குழந்தை இல்லாத பெண்கள் அம்மன் கோவில் தொட்டில் கட்டுவார்கள்
♣துதியை திதியை பஞ்சமி சப்தமி தசமி திரியோதசி ஆகியவற்றில் திருமணம் நடைபெற வேண்டும்
♣புதன் வியாழன் வெள்ளி ஞாயிறு ஆகிய கிழமைகளில் திருமண நாட்களுக்கு ஏற்ற நாட்கள்
♣வளர்பிறையில் திருமணம் செய்வது நல்லது
♣வெள்ளிக்கிழமைகளில் பெண்ணை திருமணம் செய்து அழைத்துச் செல்ல மாட்டார்கள்
♣விவசாய நிலத்தில் சோளக்காட்டு பொம்மையை வைத்தால் பயிர்களுக்கு கண் திருஷ்டி வராது என நம்புவார்கள்
♣துலாம் ராசிக்காரர்கள் வைர மோதிரம் அணிவது சிறப்பு
♣கடக ராசிக்காரர்கள் முத்து அணிவது நல்லது
♣புதன் ராசிக்காரர் மரகதம அணிவது நல்லது
♣வியாழராசிக்காரர் புஷ்பராகம் அணிந்தால் நல்லது
♣மகரக் கும்ப ராசிக்காரர்கள் நீலம் அணிவது நல்லது
♣கேது தோஷம் உடையவர்கள் வைடூரியம் அணிவது நல்லது
♣ராகு ராசியில் பிறந்தவர்கள் கோமேதகம் அணிதல் நல்லது
♣சிம்ம ராசிக்காரர்கள் மாணிக்கம் அணிதல் நல்லது
♣செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் பவளம் அணிதல் நல்லது
♣வசிய மருந்து உதவியால் சேர்ந்து வாழும் குடும்பத்தையோ நண்பர்களையோ பிரிக்கலாம் என்பார்கள்
♣நல்ல காரியத்திற்கு செல்லும் போது மூன்று பேர் சேர்ந்து போகக்கூடாது
♣நல்ல காரியத்துக்கு போகும் போது சகுனம் பார்ப்பார்கள்
♣குதிரையின் லாடத்தை வாசலின் முன்பு ஆணி அடித்து வைத்தால் தீய ஆவிகள் வராது
♣வீட்டு வாசல் முன் எலுமிச்சை கரித்துண்டு மிளகாய் கருப்பு கயிறு ஆகவே கட்டினால் கண் திருஷ்டி உள்ளே வராது
♣வாசப்படியில் பெண்கள் அமரக்கூடாது
♣சித்திரை மாதத்தில் மகன் பிறந்தான் நல்லதல்ல
♣ஆடி மாதத்தில் தலை பிள்ளை பிறப்பது நல்லதல்ல
♣அம்மாவாசை அன்று பிறக்கும் பிள்ளை சுட்டியாக இருப்பான்
♣அமாவாசையில் பிறந்தால் திருட்டு குணம் இருக்கும்
♣வெள்ளிக்கிழமை பௌர்ணமி அன்று பெண் குழந்தை பிறந்தால் நல்லது
♣வீட்டில் நல்ல காரியம் நடக்கும் போது மற்றவர் வீட்டு பெரிய காரியங்களுக்கு செல்லக்கூடாது
♣அரச வேப்ப மரத்திற்கு திருமணம் செய்து வைப்பார்கள்
♣அரச மரத்தை சுற்றி வந்தால் குழந்தை பிறக்கும்
♣எந்த ஒரு காரியம் செய்யும் போதும் குலதெய்வத்தை நினைத்து செய்தால் நல்லதே நடக்கும்
♣பெண்கள் கூந்தலை விரித்து போடக்கூடாது சாப்பிடும் போது தும்புதல் கூடாது
♣ஆண்கள் விரல் நகம் கடித்துக் கொண்டே இருக்கக் கூடாது
♣காசி யாத்திரை மேற்கொண்டவர் தனக்கு பிடித்த உணவு ஏதேனும் ஒன்றை இனி பயன்படுத்தக் கூடாது என்று காசியில் சொல்லி விட்டு விட வேண்டும்
முடிவுரை
நாட்டுப்புற மக்களின் நம்பிக்கை என்பது மூடநம்பிக்கை அல்ல அது அவர்களின் நம்பகமான அசைக்க முடியாத நம்பிக்கையாகும். நாட்டுப்புற மக்கள் வாழ்வியலில் சிறந்த அனுபவமும் முதியோர்களின் வழிநடத்தலும் அவர்கள் மேற்கொள்ளும் சடங்கு சம்பிரதாயங்கள் பழக்கவழக்கங்கள் என அனைத்தும் நம்பிக்கையின் அடிப்படையிலேயே பின்பற்றி வருகின்றனர்
துணை நூல்கள் :
1) நாட்டுப்புற நம்பிக்கைகள் :ம. மீனாட்சி சுந்தரம்
2) நாட்டுப்புறவியல் : சு. சண்முகசுந்தரம்
3) நாட்டுப்புற இயல் ஆய்வு : டாக்டர் சு.சக்திவேல்
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
வெ. கெளதம்
துறைத்தலைவர் மற்றும் உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
சசூரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
விஜயமங்கலம் , திருப்பூர் மாவட்டம்.