தொல்லியலின் வகைகள் (Kinds of Archaeology)

தொல்லியலின் வகைகள் (Kinds of Archaeology)
    தொல்லியல் என்பது பழங்காலப் பொருட்களைப் பற்றி படிக்கின்ற இயலாகும். இது பண்டைய மக்களின் கருவிகள், கலைப் பொருட்கள், மட்பாண்டங்கள் போன்ற பொருட்களின் மூலம் அம்மக்களின் வரலாற்றை  எடுத்துக்கூறுகிறது.


          தொல்லியலின் பரப்பும் எல்லையும் பரந்து விரிந்து காணப்படுகின்றன. தொல்லியல் வரலாற்றுக்கு முந்தைய காலமான தொல்பழங்காலத்தின் பல லட்சம் ஆண்டுகளைப் பற்றி விளக்குகின்றது. தொல்லியல் என்பது பல்வேறு கால மக்கள், பல்வேறு புவியியல் அமைப்பில் வாழ்ந்த மக்கள், பல்வேறு கருவிகளைக் கையாண்ட மக்கள் இப்படி பலதரப்பட்ட மக்களின் வாழ்க்கையை ஆய்வு செய்கின்ற இயலாகும். இப்படி பரந்து விரிந்துள்ள தொல்லியலின் ஆய்வுகளைக் குறிப்பிட்ட ஒரு அறிஞர் செய்திட முடியாது. எனவே தொல்லியலை வகைப்படுத்துவது அவசியமாயிற்று.

தொல்லியல் வகைகள் 
               
தொல்லியலைப் பகுதியின்  அடிப்படையிலும்,  காலத்தின் அடிப்படையிலும் பொருள் மற்றும் முறைகள் அடிப்படையிலும் வகைப்படுத்தலாம்.

1. பகுதித் தொல்லியல் (Regional Archaeology)

2. காலத்தொல்லியல் (Periodical Archaeology)

3. பொருள் மற்றும் முறைகள் சார்ந்த தொல்லியல் (Subjects and Methods Archaeology)
               
மேற்கண்ட தொல்லியலின் பிரிவுகளைத் தொல்லியல் அறிஞர்கள் கீழ்க்கண்டபடி விளக்குகின்றனர்.


1. பகுதித் தொல்லியல் 
               
தொல்லியல் அறிஞர்கள் புவியியல் பகுதி மற்றும் மண்டல அடிப்படையில் தொல்லியலைக் கீழ்க்கண்டவாறு  வகைப்படுத்துகின்றனர். அவையாவன;

அ. மத்திய தரைக்கடல் தொல்லியல் (Mediteranean Archaeology)
 
ஆ. கிரேக்கத் தொல்லியல் (Greek Archaeology)

இ.ரோமானியத் தொல்லியல் (Roman Archaeology)

ஈ.எகிப்து தொல்லியல் (Egypt Archaeology)

உ. அமெரிக்க தொல்லியல் (American Archaeology)

ஊ. இந்தியத் தொல்லியல் (Indian Archaeology)
               
இவ்வாறாகத் தொல்லியல் நிலப்பகுதியின் அடிப்படையில் பிரிக்கப்படுகின்றது. மத்திய தரைக்கடல் தொல்லியல் என்பது அப்பகுதியில் அகழாய்வு செய்து அதன்மூலம் அறியப்படும் வரலாற்றுச் செய்திகளை விளக்குவதாகும். கிரேக்கத் தொல்லியல் கிரேக்க நாட்டின் தொல்லியலையும், ரோமானியத் தொல்லியல் ரோமானிய நாட்டின் தொல்லியலையும் விளக்குகின்றன. வரலாற்றைப் புவியியல் அடிப்படையில் ‘பிரிப்பதுபோல்தான் தொல்லியலும் நாடு. மண்டல புவிப்பிரிவின் அடிப்படையில் பிரிக்கப்படுகின்றது.

2.கால அடிப்படையில் தொல்லியல்

காலத்தின் அடிப்படையில் தொல்லியலைப்   பின்வருமாறு பிரிக்கலாம்.
அ. வரலாற்றுக்கு முந்தைய காலத் தொல்லியல்
ஆ. உலோகக் காலத் தொல்லியல் வரலாற்றுக் காலத் தொல்லியல்

அ. வரலாற்றுக்கு முந்தைய காலத் தொல்லியல்
               
வரலாற்றுக்கு முந்தைய காலத் தொல்லியல் என்பது பழைய கற்காலம், இடைக் கற்காலம், புதிய கற்காலம் ஆகிய காலங்களில் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய ஆயுதங்கள், கலைப்பொருட்கள், தாழிகள் ஆகியவற்றை ஆராய்ந்து அக்கால மக்களின் வரலாற்றை அறிய உதவும் தொல்லியலாகும். இக்காலத்தில் வாழ்ந்த மக்கள் எழுத்தறிவு (Art of writing) பெற்றிருக்கவில்லை. எனவே, இலக்கியச் சான்றுகள் அறவே இல்லாத மக்கள் வாழ்ந்த காலமாகும். இக்கால மக்களின் வரலாற்றை அறியத் தொல்லியல் மூலங்கள் மட்டுமே உதவுகின்றன. உதாரணமாக இந்தியாவில் சர் இராபர்ட் புரூஸ் பூட் ஆதிச்ச நல்லூர், பல்லாவரம், கடப்பா, கர்நூல் போன்ற இடங்களில் நடத்திய ஆய்வுகள் இவ்வகைத் தொல்லியலை விளக்குவதாகும். இந்தியாவில் பல்லாவரத்தில் ஆய்வு செய்த சர் இராபர்ட் புரூஸ் பூட் ‘சென்னைக் கைக்கோடரி’ (Madras Hand Axe) என்ற கற்கால மக்களின் முதல் கல் ஆயுதத்தைக் கண்டுபிடித்தார். இவரின் பல ஆய்வுகள் தென்னிந்திய வரலாற்றுக்கு முந்தைய காலத்தைப் பற்றி விவரிக்கின்றன. எனவே தான் இவர் வரலாற்றுக்கு முந்தைய கால இந்தியத் தொல்லியலின் தந்தை (Father of Pre-historic Archaeology of India) என்று அழைக்கப்படுகிறார்.

ஆ.உலோகக் காலத் தொல்லியல்
               
“Proto-historic Period’ என்று அழைக்கப்படும் உலோகக் காலத்தொல்லியல், செம்பு கற்காலம், வெண்கல காலம், இரும்புக் காலம் ஆகியவற்றைக் குறிக்கும். இக்காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு எழுத்தறிவு (Art of Writing) தெரியும். ஆனால், அவர்கள் பயன்படுத்திய அவ்வெழுத்து முறையின் பொருளை நம்மால் அறியமுடியவில்லை. எனவே இலக்கிய மூலங்கள் இக்காலத்திற்கு கிடையாது. அக்கால மனிதர்கள் விட்டுச்சென்ற பொருள்கள், கருவிகள் போன்றவற்றை ஆய்வு செய்ய தொல்லியலார் மட்டுமே தகுதி பெறுகின்றனர். அவ்வியல் அறிஞர்களின் ஆய்வு முயற்சியால் இக்கால தொல்லியல் (Archacology) பேரா. முனைவர் நா. மாரிசாமி வரலாற்றை அறிகிறோம். இதனை விளக்குவதே உலோகக் (எ.கா.) ஹரப்பா காலத் தொல்லியல் ஆகும்.  மொகஞ்சதாரோ ஆய்வுகள். இதன் மூலமே சிந்து சமவெளி நாகரிகம் வெளிக்கொணரப்பட்டது.

இ. வரலாற்றுக்காலத் தொல்லியல் 
               
வரலாற்றுக்காலம் என்பது இலக்கியச் சான்றுகள் நமக்குக் கிடைத்துள்ள காலத்தைக் குறிக்கும். இக்கால வரலாற்றை நிரப்ப இலக்கிய மூலங்கள் மட்டுமின்றித் தொல்லியல் மூலங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன எடுத்துக்காட்டாக, பாடலிபுத்திரம், சாஞ்சி, சாரநாத் பராபர் போன்ற இடங்களில் நடைபெற்ற அகழாய்வுகள், மௌரியர் கால வரலாற்றை அறிய உதவுகின்றன. கல்வெட்டுகள் மௌரிய ஆட்சிமுறையை அன்றன. ஆகவே வரலாற்றுக்கால வரலாற்றை அறிய  உதவும் தொல்லியலை வரலாற்றுக் காலத் தொல்லியல் என்று அழைக்கின்றனர்.
   மேற்கண்டவை  மட்டுமின்றி தொல்லியலைக் காலத்தின் அடிப்படையில் கீழ்கண்ட வகைகளாகவும் பிரிக்கலாம். அவை,


அ. பண்டைய ‘காலத் தொல்லியல் (Ancient) Archaeology)

ஆ. இடைக்காலத் தொல்லியுல் (Medieval Archaeology)

இ தற்காலத் தொல்லியல் (Modern Archaeology)
               
இவ்வாறு வகைப்படுத்துவதால் தொல்லியல் அறிஞர்கள் ஒரு குறிப்பிட்ட கால வரையரைக்குள் தங்களின் கவனத்தைச் செலுத்தி ஆய்வு செய்யமுடியும்.


3. பொருள் மற்றும் முறைகள் தொல்லியல்
               
தொல்லியலைப் பொருள் அல்லது முறைகள் அடிப்படையில் கீழ்க்காணும் வகைகளாகப் பிரிக்கலாம்.

அ. அரசியல் தொல்லியல் (Political Archaeology)

ஆ. சமூகத் தொல்லியல் (Social Archaeology)

இ.பொருளாதாரத் தொல்லியல் (Economic Archaeology)

ஈ. சமயத் தொல்லியல் (Religious Archaeology)

உ. இனத் தொல்லியல் (Ethno Archaeology)


மேற்கண்ட தொல்லியல்கள் பொருள் அடிப்படையில் பிரிக்கப்படுகின்றன.


அ. அரசியல் தொல்லியல்
இவ்வகைத் தொல்லியலில் அரசு, அரசியல் தொடர்பான பொருள்கள் ஆய்வு செய்யப்படுகின்றன. அரண்மனைகள், போர்க்கருவிகள், கோட்டைகள், அரச குடும்பத்தினர் பயன்படுத்திய பொருட்கள் போன்றவற்றை ஆய்வு செய்து அரசியல் செய்திகளையும், ஆட்சி முறைகளையும் அறிவது அரசியல் தொல்லியலாகும்.


ஆ. சமூகத் தொல்லியல்
சமூகத்தின் அடிப்படை அங்கமான தனிமனிதனின் மட்பாண்டங்கள், தேவைகளுக்குப் பயன்பட்ட அணிகலன்கள், கலைப்பொருட்கள் போன்றவற்றை ஆய்வு செய்து சமூக நிலைகளை அறிவது சமூகத் தொல்லியல் ஆகும். 

இ.பொருளாதாரத் தொல்லியல்
               
பண்டைக் கால மனித சமுதாயத்தின் பொருளாதார நிலைகளை ஆய்வதே பொருளாதாரத் தொல்லியல் ஆகும். மக்களின் இத்துறை வரலாற்றுக்கு முற்பட்ட கால பொருளாதார முன்னேற்றத்தை ஆய்வதில் ஈடுபடுகின்றது. பொருட்களின் உற்பத்தி, பகிர்ந்தளிப்பு, பயன்பாடு, வணிகம், பரிமாற்றம், இயற்கைச் செல்வங்களின் பராமரிப்பு, மக்கட்தொகை, வேளாண்மை, நீர்ப்பாசனம், பொருளாதார வளர்ச்சி முதலான கால்நடை பல அம்சங்கள் செய்த வளர்ப்பு, பயிர் செய்த தானியங்கள் அவற்றைச் சேமித்தல் பொருளாதாரத் தொல்லியல் ஆய்வுகளில் அடங்கும் இயற்கையின் தாக்கத்திற்கேற்பத் தொல்பழங்கால மனிதன் எவ்வாறு பயிர்த்தொழில் மேற்கொண்டான் மற் எவ்வாறு இடம் பெயர்ந்து வேட்டையாடும் தொழிலிருந்து போன்றவற்றில் எவ்வாறு ஈடுபட்டான் என்பதை விளக்குவது பொருளாதாரத் தொல்லியல். பொருளாதாரத் தொல்லிய குறித்து ராபின் டேனியல், ஆண்ட்ரூ ஷெரட் (Andrea Sherrat) மற்றும் பலர் ஆய்ந்துள்ளனர். பொருளாதாரத் தொல்லியல் ஆய்வுகளால் தொல் பழங்காலத்தில் ஏற்பட்ட படிப்படியான வேளாண்மை வளர்ச்சி, தொழில் முன்னேற்றம், நாகரிக வளர்ச்சி, தானிய சேமிப்பு முதலான செய்திகள் அறியப்படுகின்றன.

ஈ. சமயத் தொல்லியல்           
சமயத் தொல்லியலைச் சமயங்களின் அடிப்படையில் இந்து சமயத் தொல்லியல், புத்த சமயத் தொல்லியல், சமண சமயத் தொல்லியல், கோயில் தொல்லியல் என்றெல்லாம் பிரிக்கலாம். பண்டைய கால மக்களின் வழிபாட்டு முறைகள், சிலைகள், உருவங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து விளக்குவது சமயத் தொல்லியல் ஆகும். இதன் மூலம் கடந்த கால மக்களின் கலை, கட்டிடக்கலை, சமய நம்பிக்கை போன்றவற்றை அறியலாம்.
 
உ. இனத் தொல்லியல்
       
         சமூக-மானிடவியல் (Social Anthropology) தொடர்பான செய்திகளையும் தொல்லியலார் சேகரித்து, ஆய்ந்து கணித்துள்ளார்கள். இதில் பண்டைய மக்களின் சமூகப் பண்பாட்டு நிலைகளைக் பண்பாட்டுப் பழக்கவழக்கங்கள் ஆகியவற்றைத் தொல் பொருட்கள் மூலம் ஆய்வு செய்து அறிய முடிகிறது. எஸ்கிமோக்களைப் பற்றி லெவிஸ் பென்போர்ட் அவர்களது ஆய்வு இன மரபுத் தொல்லியல் ஆய்வுகளில் ஒரு சிறந்த முன் மாதிரியாகத் திகழ்கின்றது. H.D. சங்காலியா முதலான தொல்லியல் அறிஞர்கள் இந்தியத் தொல்பழங்கால மற்றும் வரலாற்றிற்கு முந்தய கால மக்களின் வாழ்விடங்கள் சிலவற்றை ஆய்வு செய்துள்ளனர். இத்தகைய இனத்தொல்லியல், பண்டைக்காலத்தில் வாழ்ந்த மக்களின் இனங்களை எவ்வகையில் அடையாளம் காண்பது என்பதையும் விளக்குகிறது. வரலாற்றின் பல்வேறு காலக்கட்டத்தில் வாழ்ந்த மக்களின் இனங்களை ஆய்ந்து குறிப்பாக சுமேரியர்கள், ஆரியர்கள், திராவிடர்கள் போன்ற இனங்களின் தொன்மையை விளக்குவது இவ்வியல் ஆகும். எனவே மனித இனங்களைப் பற்றி ஆய்வதே இனத் தொல்லியல் ஆகும்.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

பேரா. முனைவர் நா. மாரிசாமி

நூல் – தொல்லியல் (Archaeology)

Leave a Reply