♥ விடியலை – இன்னும்
தேடிக்கொண்டிருக்கிறேன்..
சாலையோரத்தில்
அம்மாபிச்சைப் போடு
என் காதுகளில் ரீங்காரம்…
விடியலைத் தேடுகிறேன்..!
♥ குட்டிச்சுவரில்
வேலையில்லாப் பட்டதாரிகள்…
விடியலைத் தேடுகிறேன்..!
♥ பூங்காக்களில்
சிருங்கார ராஜாக்களாக
சோம்பேறிகள்!
விடியலைத் தேடுகிறேன்..!
♥ குடிமகன்களின்
மகத்தான வெற்றிகளால்
வீதியிலேப் பிள்ளைகள்..
விடியலைத் தேடுகிறேன்..
♥ கல்வியை
வியாபாரம் செய்யும்
விகடகவிகள் பலபேர்…
படிப்பை அறியத் துடிக்கும்
பாமரச்சிறுவர்கள் – கன்னத்தில்
கைவைத்தபடியே…
விடியலைத் தேடுகிறேன்..!
♥ குடும்பம் என்ற
கதம்பத்தில் – ஒற்றுமையைக்
காணத்துடிக்கின்றேன் !
நீயா.. நானா.. போட்டியில்
விவாகரத்து வாங்கி
வாசலோடு பிரிகிறார்கள் !
விடியலைத் தேடுகிறேன்..!
♥ தொலைந்து போன விடியல்
தூரத்தில் இல்லை…
கைக்கு எட்டும் தூரம்தான் !
கண்ணால் கண்டு
கைகளினால் பூட்டிடுவேன்
விடியலை ஒரு நாள் !
♥ தொலையாமல் இருக்கும்
புன்னகையைத் தொலைத்து
புகைத்துக் கொண்டிராதே…
பூமியில் உன் பெயரினைச் சொல்ல
போடு விதையை,
முளைக்கட்டும் மரம் – அது
பூப்பூக்கட்டும் கனியாகட்டும்..!
♥ பம்பரமாய் சுழன்று
வெற்றி பெறு – நான்
விடியலைத் தேடுவதை
நிறுத்தி விடுகின்றேன்..!
கவிஞர் முனைவர்.க.லெனின்
👍💯
நன்றி