உன் திறமையைக் கவர
அன்பெனும் ஆசை வார்த்தை பேசி
பாச பலவீனத்தைப் பயன்படுத்தி
இனிமையாக நம்பிக்கை கொடுத்து
உண்மையான உறவு போல் உறவாடி
உனக்குத் தெரிந்த வித்தையை
அவர்களுக்கு கற்றுக் கொடுக்க
தெளிவுடன் கற்றுக் கொண்டு
உன்னால் உயர்நிலை அடைந்து
பெருமை பலவிதம் பெற்றதும்
தேவை முடிந்ததென எதிர்த்து நின்று
மனமுடைத்து அழ வைத்து விட்டு
அடுத்தவரை ஏமாற்ற ஆயத்தமாகி
குற்றவுணர்வு சிறிதுமின்றி
பிறரைச் சூறையாட கிளம்பும்
மாயமனிதர்கள் கூட்டம்
பச்சோந்தி நிறம் மட்டுமே மாற்றும்
இவர்கள் நேரத்திற்கு தகுந்த
மனிதர்களை மாற்றும்
துரோக மனிதர்கள் தன்நலத்திற்காக
உங்கள் நம்பிக்கை உடைக்கும்
கொடுரக்காரர்கள்
இவர்கள் போன்றோரை – உங்கள்
திறமையால் தோற்கச் செய்து
வெற்றி மகுடம் சூட்டி வெக்கி
தலை குனியச் செய்து விடுங்கள் !
கவிதையின் ஆசிரியர்
முனைவர் இரா.செல்வராணி
உதவிப் பேராசிரியர்
தமிழ்த் துறை
ஜெ.எச.ஏ.அகர்சன் கல்லூரி
சென்னை -60