சிறுகதை என்றால் என்ன?

சிறுகதை

சிறுகதை என்றால் என்ன?

            சிறுகதை மிகப் பழமை சான்ற ஓர் இலக்கிய வகையாகும். இதன் வளர்ச்சிக்கு உரிய மூல ஊற்று. மாந்தரின் கதை கேட்கும் ஆர்வத்திலேயே முதலே கதை கேட்கும் இயல்பு இருந்திருக்கின்றது எனத் உள்ளது. மனித வரலாறு தொடங்கிய கால தெரிகின்றது. மனிதன் ஏன் கதையை விரும்பிக் கேட்கின்றான் என்பதும் ஒரு நல்ல வினா. இதற்குச் ‘சாமர் செட் மாம்’ என்பவர் விடை கூறுகின்றார். “உடைமை பற்றிய உணர்வு மனிதனிடத்தில் மிக ஆழமாக வேரூன்றி இருப்பது போலவே கதை கேட்கும் ஆர்வமும் மிக ஆழமாக வேரூன்றியிருக்கிறது. வரலாறு தொடங்கிய காலம் முதலே, ஒருவர் கதை சொல்வதைக் கேட்பதற்காகவே பலரும் நெருப்பைச் சுற்றிக் கூட்டமாக உட்காரும் பழக்கமோ அல்லது பொது இடத்தில் ஒன்றாக அமரும் பழக்கமோ, இருந்திருக்கின்றது. சிறுகதை என்றால் என்ன?

            வரலாற்றின்பழைமையோடுதொடர்புடையஇச் சிறுகதை ஒரு நல்ல கலையாக மிகுதியாக வளர்ந்தது பத்தொன்பது இருபதாம் நூற்றாண்டுகளில் ஆகும். இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் 1800 ம் ஆண்டுக்குப் பிறகு படித்தவர் கூட்டம் பெருகவே அவர்களின் தேவைக்கேற்பப் பருவந்தோறும் வெளியிடப் பெற்ற எல்லா வகை இலக்கியங்களின் தேவையும் பெருகிற்று’என்பர் அறிஞர். நம் தமிழகத்திலும் இந் நூற்றாண்டின் தொடக்க முதல் இலட்சக் கணக்கான மக்கள் சிறுகதையை விரும்பிப் படிக்கும் வழக்கம் ஏற்பட்டுள்ளது எனலாம்.


இக்கால இலக்கியங்களில் சிறுகதை பெறுமிடம்  

            இன்றைய இலக்கிய உலகில் சிறுகதைக்கென்றே ஒரு சிறப்பிடம் உள்ளது. நாகரிகம் முற்றிப் போக்குவரத்துக் கருவிகள் பெருகி மக்கள் மிக விரைந்து செயற்படும் இந்நாளில் பலருக்கும் படிப்பதற்கு வசதியாக உள்ள துறை சிறுகதையே ஆகும். இச் சிறுகதை எண்ணிக்கையிலும் வகையிலும் பலபடியாக வெளிவரும் இதழ்கள் பெரிதும் காரணமாக அமைகின்றன. ஒரு விரிந்து வளர்ந்து செல்வதற்கு நாடோறும் வாரந்தோறும் குறிப்பிட்ட இதழில் வெளியிடப் பெறும் சிறுகதையை அந்த இதழை எடுத்த மாத்திரத்திலேயே ஒரேவேகத்தில் படித்து .முடித்துவிடலாம்.

மற்றொன்று:


           
கருத்தாழம், நடைச்செறிவு முதலியன நிறைந்த விழுமிய பேரிலக்கியங்களை ஆழ ஊன்றி அமைதியாகப் படிப்பதற்குரிய பொறுமை பெரும்பாலோர்க்கு இன்று இல்லாமையும் சிறு கதையின் செல்வாக்குக்குக் காரணமாகின்றது. இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் போன்ற பண்பட்ட உயரிய இலக்கியங்களைக் கற்பதற்குரிய நேரமும் ஓய்வும் வசதியும் கல்வியும் இல்லாத இலட்சக்கணக்கான மக்கள் சிறுகதையைச் சிறிது நேரத்தில் படித்து முடித்துச் சிறியதொரு கலைப்பயனை விரைந்து பெற முடிகின்றது. எனவே, உயர்ந்த இறவாத பேரிலக்கியங் களையும், புரிந்து கொள்ளக் கடினமாக இருக்கும் இலக்கியப் பகுதிகளையும் கற்று மகிழ முடியாத இலட்சக்கணக்கான மக்கள் இன்று சிறுகதைகளைக் கற்று இன்புறும் நிலை ஏற்பட்டுள்ளது. சுருங்கக் கூறின் புதினம் போலவே சிறுகதையும் மக்கள் இலக்கியமாக மலர்ந்துள்ளது.

சிறுகதையின் விளக்கம்

            சிறுகதைஎன்றால்என்ன?சிறிய அளவில் அமைந்த கதையே சிறுகதையாகும்.

        இப்படி ஒரு வரையறையைச் சிறு கதைக்குச் சொல்ல ‘முடிந்தாலும் ‘அளவு’ என்பதிலே ஆசிரியர்களிடையே றுபாடு இருக்கின்றது. ஒரு பக்கம் அல்லது இருபக்க அளவில் அமைந்த சிறுகதையும் உண்டு: மிகப் பெரிய சிறுகதையும் உண்டு.  வெவ்வேறு ஆசிரியர் எழுதும் சிறுகதையின் அளவு வேறுபடினும் சிறுகதைக்கென்றே அமைந்த சில தன்மைகளும் கட்டுக் கோப்புகளும்தோன்றிவிட்டன. ஹெச்.ஜி. வெல்ஸ் என்பார் சிறுகதையைக் குறித்துப் பின்வருமாறு கூறியுள்ளார்.

            ஒரு சிறுகதை என்பது எளிமை சான்ற ஒரு படைப்பாக இருக்கின்றது; அல்லது இருத்தல் வேண்டும். ஏதாவது ஒரு சிறிய தெளிவானபயனை மட்டும் விளைவிக்க அது முயலுகின்றது. எடுத்த எடுப்பிலேயே பயில்வோரின் கவனத்தை ஈர்த்துப் பிடித்தல் வேண்டும். நெகிழ்ச்சியின்றி இயங்கி உச்சநிலை முடியும்வரை வாசகரின் முழுக் கவனத்தையும் ஒருமுகப்படுத்தி மேன்மேலும் ஆழமாக ஊன்றச் செய்ய வேண்டும். எதையும் மிக உன்னிப்பாகக் கவனிக்கும் மனிதனின் திறமை நீண்டநேரம் நீடிக்க முடியாது. சிறுகதைப் பயிற்சியிலும் இவ்வுண்மை பொருந்துவதாகும். ஆகவே, இடையீடோ சோர்வோ நேருவதற்கு முன்பாகவே சிறுகதை நன்கு வெடித்து முற்றுப் பெறுதல் வேண்டும்

     ஹெ ச்.இ. பேட்ஸ் என்பவர், “எழுதும் ஆசிரியர் எண்ணித் துணியும் வண்ணம் சிறுகதை எவ்வாறு வேண்டுமானாலும் அமையலாம்’ என்கின்றார் எனவே மேற்கூறிய கூற்றுகள் வாயிலாகச் சிறுகதை . என்பது அளவில் சிறியதாக அமையவேண்டும் என்பதும், தொடக்க முதல் முடிவுவரை நம் கவனத்தைச் சிக்கெனப் பிடித்து ஒருமுகப்படுத்திக் கலைப் பயனை விளைவிக்க வேண்டும் என்பதும், சிறுகதை சிறிய கதையாகவே அமைவது நல்லது என்பதும் நமக்கு நன்கு விளங்கும்.

புதினத்திற்கும் சிறுகதைக்கும் உரிய வேற்றுமை

            புதினம், சிறுகதை ஆகிய இரண்டிலும் உரையாடல் வருணனை, நிகழ்ச்சிக்குரிய பின்னணி முதலியவற்றால் ஒற்றுமைகள் உண்டு. வேறு வகையிற் சில வேற்றுமைகளும் உண்டு. அவற்றைப் பின்வருமாறு விளக்கலாம்.

1. புதினத்திற்குரிய கருப்பொருள், மனிதப் பண்பின் செயலின், வாழ்க்கையின் பல பகுதிகளையும் உள்ளடக்கியதாய் பண்பையோ செயலையோ வாழ்க்கையின் ஏதாவது ஒரு அமையலாம். சிறுகதைக்குரிய கருப்பொருளோ குறிப்பிட்டஒருகூற்றையோ மையமாகக் கொண்டு அமையும்.
2.வெவ்வேறு கதை மாந்தரின் பண்புகளுக்கும் செயல்களுக்கும் இடையே எழும் பல சிக்கல்களையும் விரித்துச் சென்று அச்சிக்கல்கள் படிப்படியாய் நீங்கி ஒரு முடிவு ஏற்படுவதனை நாவல் காட்டும். சிறுகதையோ, ஏதாவது ஒரு சூழ்நிலை அல்லது சிக்கலைச் சுற்றிப் பின்னிப் பிணைந்து வளர்ந்து சென்று, நாம் எதிர்பாரா நிலையில் ஓர் அதிர்ச்சியைத் தந்து கூடத் திடீரென்று முடியலாம்.
3.புதினம், நிகழ்ச்சியின் பெருக்காலும் கதை மாந்தரின் பண்பாலும் வாசகர்க்குப் பல்வகையான சிந்தனையையும் உணர்வையும் உண்டாக்க வல்லது; சிறு கதையோ, ஏதாவது ஒரு சிறிய நிகழ்ச்சியைச் சுற்றி அல்லது பண்பைச் சுற்றி வாசகரின் கவனம் முழுவதையும் ஈடுபடுத்தி அது சம்பந்தமாக ஓர் ஆழமான சிந்தனையை அல்லது உணர்வை எழுப்புவதாகும்.
4.புதினம் எழுப்பும் கலையார்வம் நீண்டநேரம் நீடித்து நிற்க வல்லது; அளவிலும் பெரியது. சிறுகதை எழுப்பும் கலையார்வமோ விரைந்து பெருகி விரைந்து நிறைவேறும் இயல்புடையது.
5.புதினத்தில், கதை மாந்தரின் பண்புகள், மன நிலைகள் படிப்படியாக வளர்ந்து செல்லுவதைக் காட்டுவதற்கு இடமுண்டு; சிறுகதையில் அவ்வாய்ப்பு இல்லை.
6.புதினம் வாழ்க்கையை அதன் பல்வேறு வடிவத்தோடும் சிக்கலோடும் படம்பிடித்துக் காட்ட வல்லது. சிறுகதையோ அவ்வகையில் அந்த அளவுக்கு வாய்ப்பு அற்றதாகும். காரணம், சிறுகதைக்குரிய களம் சிறியதாகும்.
7. நடைமுறை வாழ்வில் நாம் மனிதர் பலரையும் சந்திப்பது போலவே புதினத்திலும் சந்திக்க முடிகின்றது. அம்மனிதர் பல்வேறு உறவு முறைகளோடும் விருப்பு வெறுப்புகளோடும் அவ்வச்சூழ்நிலைக்கேற்ப ஒருவரோடு ஒருவர் பழகுகின்றனர்; பேசுகின்றனர்; செயற்படுகின்றனர். எனவே, இவர்களைப் பற்றி விரிவாக ஆழமாக நம்மால் நன்கு அறிந்து கொள்ள முடிகின்றது. இறுதியில் இவர்களின் குறை நிறைகளைப்பற்றிச் சரியாகக் கவனிக்க முடிகின்றது. ஆயின் சிறு கதையில் இடம் பெறும் பாத்திரங்களைச் சிறிது நேரமே நம்மாற் காணமுடிகிறது. அவர்கள். நடமாடும் உலகமும் சூழ்நிலைகளும் சிறிது நேரமே நம் கண்களுக்குத் தெரிகின்றன. இதனால் யாரோ ஒருவரின் குறிப்பிட்ட பண்பு அல்லது செயலைப் பற்றி ஆழமான, ஆற்றல் மிக்க ஓர் உணர்வு நம் உள்ளத்தில் எழுகின்றது என்பது உண்மையே. ஆயினும் புதினத்தில் நடமாடும் மாந்தரைப் பற்றி நமக்குத் தோன்றும் ஒரு பெரிய விரிவான தெளிவான உணர்வோடு அதனை ஒப்பிட முடியாது.
8. மொத்தத்தில், புதினத்தின் அமைப்பு வேறு; சிறுகதையின் அமைப்புவேறு.
            பல பறவைகளும் ஒரு கூட்டமாகச் சேர்ந்து பறப்பது போன்றது புதினம். ஒரு பறவை மட்டும் தனித்துப் பறப்பது போன்றது சிறுகதை. பல்வகை வண்ணங்களைக் கொண்டு வரைந்த ஒரு பெரிய ஓவியம் போன்றது புதினம்; ஒன்றிரண்டு வண்ணங்களையே கொண்டு வரைந்த ஒரு சிறிய ஓவியம் போன்றது சிறுகதை,

       ஆடற்கலையில் வல்ல அழகு நங்கையர் பலர் கலையரங்கின் மீது கண்ணன் கதை முழுவதையும் நடித்துக் காட்டுவது போன்றதும் புதினம். கண்ணன் இன்னிசைக் குழல் எடுத்து ஊத எழும் இன்ப கீதத்தில் தன்னை மறந்து மயங்கித் தவிக்கும் ஏந்திழை ஒருத்தியின் நிலையை அரங்கின் மீது ஒருவர் நடித்துக் காட்டுவது போன்றதுசிறுகதை. பலவகை மரமும் செழித்தோங்கிய ஒரு தோப்புப் போன்றது புதினம்; தனி மரம் போன்றது சிறுகதை.

சிறுகதைக்குரியபொருள்

       இன்ன பொருளைத்தான் சிறு கதையில் அமைக்க வேண்டும் என்ற நியதி இல்லை. மனிதனின் ஆர்வத்தைத் தூண்டி எழுப்பிக் கலைவிருந்து அளிக்க வல்ல எதுவும் சிறு கதைப் பொருளாக அமையலாம். ஆயின், இப் பொருள் அனைத்தும் தோன்றுவதற்குரிய நிலைக்களங்கள் மனித வாழ்க்கையும் விலங்கு பறவை முதலானவற்றின் வாழ்க்கையும் மரஞ்செடி கொடி முதலானவற்றின் இயற்கை வாழ்கையுமாகும். இந்நிலைக் களங்களில் எங்கோ என்றோ யாரிடமோ அல்லது எதனிடத்தோ அல்லது எச் சூழலிலோ, ஏதோ ஒரு கூற்றைக் கூர்ந்து பார்க்கும் எழுத்தாளன் ஒருவனிடமிருந்து சிறு கதை அரும்புகின்றது

      பரபரப்பு ஊட்டவல்ல ஒரு சிறிய நிகழ்ச்சி அல்லது சூழ்நிலை, உள்ளங் கவரும் ஓர் அரிய காட்சி, ஒன்றோடொன்று நெருக்கமாகத் தொடர்புடைய நிகழ்ச்சிகளின் கோவை, ஒரு பாத்திரத்தின் ஏதாவது ஒரு கூறு. ஏதாவது ஒரு சிறிய வாழ்வின் ஏதாவது ஒரு சிறிய கூறு, அறம் பற்றி எழும் ஒரு சிக்கல் அமையலாம். இவை போலப் பிற இருப்பின் அவையும் சிறுகதைக்குரிய பொருளாகும்*


சிறுகதைக்குரிய கால எல்லை

        ஒரு சிறு கதையானது. அரை மணி நேர முதல் இரண்டு மணி நேரத்திற்குள் படித்து முடித்துவிடக் கூடியதாய் அமைய வேண்டும் என்கின்றார் உலகப் புகழ் பெற்ற சிறுகதை எழுத்தாளர் எட்கர் ஆலன்போ ‘ சிறு கதையைப் படித்துப் பார்க்கலாம் என்று அமருகின்றோம். அப்படி அமர்ந்தவுடன் முடியும் வரை படித்து முடித்துவிட்டுப் பின் எழக்கூடிய வண்ணம் சிறுகதை அமைய வேண்டும். சிறு கதையில் இடம்பெறும் நிகழ்ச்சிக்குரிய கால எல்லை இவ்வளவுதான் என்று வரையறுக்க முடியாது. ஒரு மணி நேரத்தில் நடந்துமுடியும் ஒரு நிகழ்ச்சியைப் பற்றியும் சிறு கதை அமையலாம். சில ஆண்டுகளாகிய பெரிய கால எல்லைக்குள் நடந்து முடிந்த நிகழ்ச்சியைப் பற்றியும் சிறு கதை அமையலாம். கதையாசிரியர் தம் சிறுகதைக் கட்டுக்கோப்புக் கலைத்திறத்தால், சிறு கதையில் இடம் பெறும் கால எல்லை, அக்கதையால் விளையக் கூடிய மொத்தப் பயனுக்குச் சிறிதும் இடர்ப்பாடு விளைவிக்கா வண்ணம் கதையை நடத்திச் செல்ல முடியும்.


சிறுகதைக்குரிய ஒருமைப்பாடு

     கதை அமைப்பின் தலையாய இயல்பு ‘ஒருமைப்பாடு’ ஆகும். ஒரு சிறுகதையின் ஒவ்வொரு பகுதியும் பொருத்தமாக அமைய வேண்டும். அக் கதையால் விளையும் உணர்ச்சி விளைவும் ஒருமுகப்பட்டதாக இருத்தல் வேண்டும். கதையின் ஒவ்வொரு பகுதியும் வளர்ந்து செல்லும் போது அப்பகுதியை அமைத்த ஆசிரியரின் உள்நோக்கம் அவரின் முழு நோக்கத்தை நோக்கி இயங்குவதாக அமைய வேண்டும். கதை மாந்தரின் செயல் முறைகள் முற்றுப் பெறும்போது இயற்கையான போக்கில் முற்றுப் பெறுவது போல நாம் உணர வேண்டும். அவ்வாறு முற்றுப் பெறுமாயின் கதையை ஆசிரியர், அமைத்தநோக்கும் நிறைவேறுகின்றது எனலாம். சிறு கதை என்னுங் இயற்கைச் சாயலோடு ஆசிரியர் அவிழ்க்கவும் வேண்டும்.சிறு கயிற்றில் முதலில் போட்ட முடிச்சை எளிமையாக, இனிமையாக இருத்தல் போலவே, அக்கதை நிகழ்ச்சிகளின் போக்கும் கதையை ஆசிரியர் படைத்ததின் நோக்கம் ஒருமுகப்பட்டதாய் ஒருமுகப்பட்டதாய், நம் கவனத்தையும் ஆர்வத்தையும் சிறிதும் சிதற அடிக்காமல், ஏதோ ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி அழைத்துச் செல்வதாய் இருத்தல் வேண்டும்.

       சிறுகதை ஏதாவது ஒரு மையக் கருத்தை மட்டுமே விளக்குவதாய் இருத்தல் வேண்டும். அந்த ஒன்றும் காரண காரிய முறைப்படி வளர்ந்து முற்றுப் பெறுதல் வேண்டும். முழுக்க முழுக்க ஒருமுகப்பட்ட தன்மையோடு இயங்கி முற்றுப் பெறுதல் வேண்டும். ஒரு சிறு கதை மிக்க சுவையுடையதாக அமைய வேண்டுமாயின் இவ்வொருமுகவியல்பு மிக மிக இன்றியமையாததாகும். கதையின் தொடக்கத்திலும் இடையிலும் முடிவிலும் குறிப்பிட்ட ஓர் உணர்வே மிகுதியாக ஆட்சி செய்ய வேண்டும். கதையின் பின்னணி, கதை நிகழ்ச்சி முதலியன அனைத்தும் அந்த ஓர் உணர்வின் போக்கிலேயே நம்மை அழைத்துச் செல்ல வேண்டும். இதனை ‘உணர்ச்சி விளைவின் ஒருமைப்பாடு’ (Unity of Impression) எனலாம்

சிறுகதையின் அமைப்பு

           சிறு கதைக்குரிய பொருளானது குறிப்பிட்ட எல்லைக்குள் வேண்டுமளவுக்கு ஆற்றலோடு வளர்க்கப்படும் ஒன்றாக அமைய வேண்டும். இவ்வாறு வளர்க்கப்பட்டுள்ளது என்பதை எப்படி அறிவது? சிறுகதையைப் படித்தவர் மன நிறைவு பெற்றதையும் பெறாததையும் கொண்டு அறியலாம். சிறு கதையின் பொருளும்

            நோக்கமும் எவையாக இருப்பினும் அதன் இயல்பு மட்டும் ஒரு வகையில் உறுதியாக அமைய வேண்டும். அஃதாவது இந்தக் ததையை வளர்த்திருந்தாலும் எந்த விதப்பயனும் இருக்கப் போவதில்லை என்று வாசகர் உறுதியாக எண்ணும் அளவுக்குச் சிறு கதை முற்றுப் பெற்றிருத்தல் வேண்டும். ‘இதைப் பற்றி இன்னமும் கொஞ்சம் சொல்லாமற் போனதால் கதையின் சுவை குறைந்து விட்டது” என்று பயில்வோர் நினைக்குமாறு சிறுகதை அமையக்கூடாது. சிறுகதையின் பொருளும் வளர்ச்சியும் சுருக்கமாக. ஆனால், நிறைவு அளிக்கும் வகையில் அமைய வேண்டும். கதையின் பல பகுதிகளும்ஒன்றோடொன்றுபொருத்தமுற இயைபு பட்டுச் செல்லுதல் வேண்டும். அப்பகுதிகளுள் ஒவ்வொன்றும் கதையின் நோக்கத்தை நிறை வேற்றுவதற்கு இன்றியமையாததாய் இருத்தல் வேண்டும். தேவைக்கு அதிகம் என்று எண்ண முடியாதபடிஇருத்தல்வேண்டும்.

சிறுகதையில் உரையாடலும் வருணனையும்

       சிறுகதையில் உரையாடல் நீளமாக இருத்தல் கூடாது; செறிவும் தெளிவும் பெற்று நெகிழ்ச்சியின்றி அமைய வேண்டும். உரையாடலின் ஒவ்வொரு பகுதியும் கதையின் மையக் கருத்திற்கும் நோக்கத்திற்கும் இன்றியமையாததாய் இருத்தல் வேண்டும். விறு விறுப்பான கதை வளர்ச்சியைத் தடை செய்யும்படியாகவோ, வாசகருக்குச் சலிப்பூட்டும் படியாகவோ, எந்த ஒரு பகுதியும் உரையாடலில் இடம் பெற்று விடலாகாது; மின்னலின் வீச்சைப் போலக் கதையின் உயிர்ப் பொருளைப் பிரதிபலிக்கும் வண்ணம் அழகான சில சொற்கள் அமைவது சிறப்புடையது. வாசகர்களின் சுவையுணர்வைக் கெடுக்கக்கூடிய, அல்லது, அவர்களின் கவனத்தைக் கதையின் போக்கிலிருந்து வேறுதிசைக்குத் திருப்பக்கூடிய எந்த ஒரு சொல்லும் உரையாடலில் இடம் பெறலாகாது.

            சிறுகதையில் வருணனை அடிக்கடி இடம் பெறுதலாகாது, ஒன்றிரண்டு இடங்களில் இடம் பெறலாம். அந்த வருணனையும் கதையால் உருவாக இருக்கும் முழுப் பயனுக்கு ஏதாவது ஒரு வகையில் பயன்படுவதாய் இருக்க வேண்டும். கதை மாந்தரின் பண்பினை அல்லது செயலினை மறைமுகமாகச் சுட்டிக் காட்டும் முறையிலோ அல்லது அப்பண்பையும் செயலையும் குறித்துக் கட்டியங் கூறும் முறையிலோ அமையலாம். சிறு கதைக்குச் செறிவும் ஒருமுகப் போக்கும் இன்றியமையாதவையாதலின், வருணனையும் இவற்றைச்  சிறிதும் கெடுக்கா வண்ணம் இடம்பெறுதல் வேண்டும்.

            வருணனை, அளவாற் பெருகிவிடாது, சிறியதாய் இருத்தல் வேண்டும். கதையில் நடமாடும் மாந்தரை அவரவர்க்கே உரிய இடம், சூழல் முதலியவற்றோடு தொடர்புபடுத்திக் காட்டும் முறையிலும் வருணனை அமையலாம். எப்படிப் பார்க்கினும் கதையாசிரியர் தாம் திட்டமிட்டு எடுத்துக் கொண்ட கருத்தையும் நோக்கத்தையும் நிறைவேற்றும் முறையிலேயே வருணனையும்அமையவேண்டும்.

சிறுகதைக்குரிய குறிக்கோள்


            சிறு கதைக்குக் குறிக்கோள் உண்டா? ஆம், உண்டு. என்ன குறிக்கோள்? சிறிது நேரத்திற்கேனும் வாசகரின் கவனம் முழுவதையும் ஈர்த்துப் பிடித்து அவர்க்குக் கலைச் சுவையை வழங்குவது தான். இயற்கை வாழ்வின் ஒரு கூற்றை, யாரேனும் ஒருவரின் பண்பை அல்லது செயலை, ஏதேனும் ஒன்றன் இயக்கத்தை அல்லது செயற்பாட்டை எங்கோ ஒரு மூலையில் மறைந்து கிடக்கும் ஒரு இரகசியத்தைக் கலைச்சுவை சிறிதும் குன்றா வண்ணம் வெளிப்படுத்துவதே சிறுகதையின் நோக்கம் அல்லது குறிக்கோள் எனலாம். அறப் பண்பு, நீதிபோதனை, தத்துவ விளக்கம், சிந்தனைப் புரட்சி, சமுதாயச் சீர்திருத்தம் முதலியனவும் சிறு கதைக்குரிய குறிக்கோளாக அமையலாம். ஆயின் அவையும் சிறு கதைக் கலைத்திறன்களோடு வெளிப்பட

வேண்டும்.

ஸ்டீவன்சன் காட்டும் மூன்று வகையான சிறுகதைகள்

        சிறு கதையை எழுதுவதற்குரிய வழிகளை மூன்றாகச் சொல்லுவார் ஸ்டீவன்சன் கருப்பொருளை முதலில் நினைத்து வைத்துக் கொண்டு அக்கருப் (Stevenson). கதைக்குரிய சிறுகதைக்குள் சேர்க்கலாம். இரண்டாவது வழி; ஒரு குறிப்பிட்ட குணச் சித்திரத்தை மனத்திற் கொண்டு அதை விளக்கிக் காட்டுவதற்குரிய நிகழ்ச்சிகளையும் சூழ்நிலைகளையும் கதையில் அமைக்கலாம். மூன்றாவது வழி ஆசிரியர் தம் உள்ளத்தில் ஒரு குறிப்பிட்ட உணர்வைத் தோற்றுவித்த ஒரு குறிப்பிட்ட இயற்கைச் சூழலைக் கொண்டே சிறு கதையை அமைக்கலாம்; அச் சூழலும் உணர்வும் கதையில் நன்கு வெளிப்படுவதற்கு ஏற்ற வண்ணம் மனிதரையும் செயல்களையும் படைத்துக் கொள்ளலாம் இவ்வகையில் நோக்கும்போது சிறு கதையை மூன்றாகப் பிரிக்கலாம்.

            முதல் வகையைக் கருவால் வந்த கதை (The Story of plot)என்றும், இரண்டாம் வகையைக் குணச் சித்திரத்தால் வந்த கதை (The Story of Character) என்றும் மூன்றாம் வகையை உணர்ச்சிப் பதிவால் வந்த கதை (The Story of Impression) என்றும்சொல்லலாம் என்பர்.

நன்றி

இலக்கியத் திறனாய்வு, டாக்டர் சு.பாலச்சந்திரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here