காந்தியின் புன்னகை பார்க்க
நாங்கள் நாளும் அழுகிறோம்!
இரண்டாயிரம் ரூபாய் தாளின்
நிறம் என்ன என்று
ஏழைகளைப் பார்த்து
ஏழுமலையான் கேட்டான்…
கூட்டத்தில் எழுந்த குப்புசாமி
இரண்டாயிரமா ?
அது எப்போது அரசு வெளியிட்டது
வந்ததும் தெரியாது
போனதும் தெரியாது
நாங்கள் வாழ்கிற – வாழ்க்கை
உலகம் அறியாது!
ஏழைகளின் பத்து விரலில்
எப்போதும் சிக்குவது சில்லரையே!
நீங்கள் மடி கணினியில்
மணிக்கணக்கில் வேலை செய்கிறீர்கள்…
எங்கள் பெண்கள் மடியில்
கணத்துடன் மதிய வெயிலிலும்
வேலை செய்கிறார்கள்!
எங்கள் வாழ்வில் உதயமாகும் – சூரியன்
இருளை மட்டும் பரப்புகிறது!
எங்கள் வீட்டில் வளரும் ஆடுகள்
இலையும் பூவும் உண்பது இல்லை!
மாறாக
இலையும் பூவும்தான்
ஆடுகளை உண்டு செரிக்கிறது!
மதம் பிடித்த யானையிடம்
ஆசிர்வாதம் வாங்கிட
காத்துக்கிடக்கிறோம்…
கல்லறையின் வாயிலில்!
கவிதையின் ஆசிரியர்
சு.தமிழ்ச்செல்வன் S/O வெ.சுகுமாரன்
1-36A, சாலைத்தெரு,செருகளத்தூர்,
குடவாசல்(வட்டம்),திருவாரூர்(மாவட்டம்)
பின்-612604,
மின்னஞ்சல்-vstamil481@gmail.com