Padinilai Koorugalaga Thalattuppadalgal|M. Chitra Priya

படிநிலைக் கூறுகளாகத் தாலாட்டுப்பாடல்கள்
Abstract
            Lullabies are songs sung by mothers for their children. The aim of this study is to find out whether lullabies are still oral songs in folk songs. Lullabies are related to human emotions. Singing lullabies makes the child forget himself and fall asleep. Lullabies are not only for this time but also for all times, although they have changed slightly. The ideas of this article are that lullabies are always in stages.

படிநிலைக் கூறுகளாகத் தாலாட்டுப்பாடல்கள்
ஆய்வுச்சுருக்கம்
          தாலாட்டுப் பாடல்கள் என்பது தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்காகப் பாடும் பாடல்கள். இந்த ஆய்வின் நோக்கம், நாட்டுப்புறப் பாடல்களில் தாலாட்டுப் பாடல்கள் இன்னும் வாய்மொழிப் பாடல்களாக இருக்கிறதா என்பதைக் கண்டறிவதாகும். தாலாட்டுப் பாடல்கள் மனித உணர்வுகளுடன் தொடர்புடையவை. தாலாட்டுப் பாடல்களைப் பாடுவது குழந்தை தன்னை மறந்து தூங்கச் செய்கிறது. தாலாட்டுப் பாடல்கள் இந்தக் காலத்திற்கு மட்டுமல்ல, எக்காலத்திற்கும் சிறிது மாறுப்பட்டாலும் படி நிலைகளாக இருந்து வருகிறது.

குறியீட்டுச் சொற்கள்
: தாலாட்டு, செல்வம், முத்து, படிநிலை, பவளம்

முன்னுரை         
       படிநிலைக் கூறுகளாக தாலாட்டுப்பாடல்கள் தாலாட்டு என்பது குழந்தைகள் தூங்க வைக்கும் போது பாடப்படும் பாட்டு ஆகும். இது குழந்தைகளின் அழுகையை நிறுத்தவும் குழந்தைகளை மகிழ்விக்கப் பாடப்படும் பாட்டுக்கள் ஆகும். தாய்மார்களின் மனதில் இருந்து குழந்தைகளுக்காக பாடப்படும் பாடல் வரிகள் ஆகும். தாலாட்டு பாடலின் மூலம் குழந்தை தன்னை மறந்து தூங்குகிறது.

தாலாட்டுப் பாடல்களின் படிநிலைகள்
         
        தாலாட்டுப் பாடல்கள் இன்ஸ்டாலமும் குழந்தைகளுக்காக நாட்டுப்புறங்களில் பாடப்பட்டு வருகின்றன. இன்றளவும் குழந்தைகளுக்குத் தொட்டில் கட்டி அதில் குழந்தையை இட்டு தாலாட்டுப்பாட்டினைக் குழந்தைகளுக்குப் பாடி வருகின்றனர். தாலாட்டுப்பாடல் மனிதனின் உணர்வுகளோடு தாய் மற்றும் சேய் தொடர்பான தொடர்புடையது எனலாம். வாய்மொழி சார்ந்த கூறுகளாக இன்றளவும் தாலாட்டுப் பாடல்கள் இருந்து வருகிறது. தாலாட்டுப் பாடல்களின் தன்மை தாய் மற்றும் சேய் எக்காலத்திற்கும் பொருந்தும் உணர்ச்சிப் பாடல்களாக இருந்து வருகின்றது.
தாலாட்டு
         
தால் என்பது நாவை குறிக்கும் நாவினால் குரல் ஓசையை எழுப்புவதன் மூலம் குழந்தையைத் தொட்டிலில் இட்டு ஆட்டுதல் என்பதால் தாலாட்டு என்று பெயர் பெற்றது. தாலாட்டுத் தொடக்கத்திலும் இறுதியிலும் ராரோ ஆரிரரோ ஆரிரரோ என்று பாடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. தாலாட்டுப் பாடுகிற பொழுது முதலில் ராரி ராரி ரா ரராரோ ரார் என்றும் தூரி தூரி ரா ரா தூரி என்றும் தொடங்குவது எச்சக் கூறுகளாக உள்ளது. ரா ரா ரி ரி என்று தொடங்குவதால் தாய்மார்கள் பாட்டை எளிதில் பாட முடிகிறது. ஆனால் அவர்கள் இதற்கென்று பயிற்சி பெறுவதில்லை. இந்தத் தாலாட்டு பாடல்களில் குழந்தைகளுக்குத் தேவையான பால் கறக்கும் மாட்டையும், குழந்தை விளையாடுவதற்குத் தேவையான விளையாட்டுப் பொருட்களையும் வாங்கி வந்து கொடுக்கும் மாமனை புகழ்ந்தும் பாடி வருகின்றனர்.

தாலாட்டுப்பாடல்கள்
கண்ணா சிறு சலங்கை
எனக்கு காலு அழுந்ததுன்னு
தங்க சிலுசலங்க
இந்த தங்கம் ஏன் அழுகுது 
தார உழுந்து போகும்னு
கழட்டி வைப்பான்
உன்மாமா உன்மாமா
என் தங்கம் நடக்கும் இடத்தில்
தாமரை வெப்பா உன் மாமா..!
குழந்தைகளுக்கான தாலாட்டுப் பாடல்கள்
         
     குழந்தைக்குப் பசி ஏற்பட்டுப் பசிக்கு அழுதாலும் தூக்கத்திற்காக அழுதாலும் தாய்மார்கள் குழந்தையைத் தொட்டிலில் இட்டு தாலாட்டுகின்றனர். தாலாட்டுப் பாடுகின்ற வழக்கம் தமிழகத்தில் கிராமங்கள் மட்டுமின்றி நகரங்கள் என வேறுபாடு இன்றி இவ்வழக்கம் உள்ளது.  தாலாட்டுப் பாடல்களின் செல்வம், முத்து, பவளம் போன்ற வளம் தரும் சொற்கள் மிகுதியாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறு வளம் தரும் சொற்களைப் பயன்படுத்துவதால் குழந்தை வளம் பெற்று வளரும் என்ற நம்பிக்கை எச்சக்கூறுகளாக இன்றளவும் தாலாட்டு பாடல்களில் இடம்பெற்று வருகின்றது. குழந்தை நன்றாக வளர வேண்டும் வாழ வேண்டும் என்ற எண்ணத்தால் இப்பாடல்கள் இன்றளவும் பாடப்பட்டு வருகிறது.

முடிவுரை
      குழந்தைகளுக்காகத் தாலாட்டுப்பாடும் பழக்கங்கள் பழங்காலங்கள் தொட்டு இன்றளவும் இருந்து வருகின்றன. மேலும் தாலாட்டுப்பாடல்கள் எக்காலத்திற்கும் படிநிலை கூறுகளாக இருந்து வருவது மிகவும் போற்றுத்தக்கதாகும்
துணைநூற்பட்டியல்
1. கள ஆய்வு

2. கோவைக் கிழார், எங்கள் நாட்டுப்புறம்.

3. சண்முகசுந்தரம் க, தமிழக நாட்டுப்புற பாடல்கள்

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
மு.சித்ரப்ரியா
உதவிப் பேராசிரியர்
கோபி கலை அறிவியல் கல்லூரி
கோபிசெட்டிபாளையம் – 638453.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here