KARRIKKAL AMMAIVARIN  BHAKTI NILAI|S. KANIMOLI

காரைக்கால் அம்மையாரின் பக்தி நிலை - ச. கனிமொழி
Abstract          
       He walked with his hands on the Kailaimalai and was called the mother. Sivanadiyar, who lived in the form of a ghost, incarnated. Andhathi, who introduced Tamil to a new literary genre. When we feel the inheritance of love as a father and daughter, let us think of the slightest history of the piety of the soul.

காரைக்கால் அம்மையாரின் பக்தி நிலை

ஆய்வுச் சுருக்கம்
               

கயிலைமலையின் மீது கைகளால் நடந்து சென்று சிவபொருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர். காரைக்கால் பெற்ற பெரும் பேறு புனிதவதியார் அவதரித்தது பேய் உருவில் வாழ்ந்த சிவனடியார். அந்தாதி என்ற புதிய இலக்கிய வகையை தமிழுக்கு அறிமுகம் செய்த அருளடியார். தந்தையும் மகளுமாய் அன்பின் கலந்த நிற்கும் பரம்பொருளை உணர்கின்ற வேளை ஆன்மாவின் புனிதநிலை இப்புண்ணியவதியின் பக்தி வரலாற்றின் சிறிதளவை  நாமும் சிந்தனை செய்வோமாக.

பிறப்பு
                     
சோழநாட்டில் சிறந்த நகரமான  காரைக்காலில் வணிகத் தொழிலில் புகழ்பெற்று விளங்கிய தனத்ததனின் மகளாகப் பிறந்தவர்  புனிதவதியா. சிறுவயது முதலே சிவபக்தியில் சிறந்து விளங்கியவர். நாகப்பட்டினம் நீதிபதியின் மகன் மதத்தன் என்பாரைப்  பெரியோர்களால் நிச்சயக்கப்பட்ட திருமணம் செய்தனர். அன்புடன் போற்றி வளர்க்கப்பட்ட இப்புனிதவதியா சிறந்த சிவபக்த தையாகவும் நமச்சிவாய, நமசிவய  மந்திரத்தை இடையறாது சொல்லுபவர் அம்மையார்.

அடியார் சேவை
                
அடியார்களைக்   கண்டால்  வழிபாடுசெய்யும் பக்குவம் உடையவர். செல்வச் செழிப்புடன்  வாழ்ந்தவர். காரைக்காலில்  குறை இன்றி இல்லறம் நடத்தி வந்தார். ஒரு நாள் இல்லத்தில் கணவரின் கைகளால் இரண்டு மாங்கனிகள் அம்மையாரிடம் வழங்கப்படுகிறது. அப்பொழுது அன்பு கொண்ட அடியார் ஒருவரின் பசியினை போக்குவதற்காகக் கனியினை  திரு அமுதாகப் படைத்தார். இந்நிலையில் கணவருக்குச் சிறந்த கறி உணவினைப்  படைக்கின்றார். அச்சமயத்தில் தான்  தந்த கனியினையும் அவர் தருமாறு கேட்கின்றார். அக்கனியினை உண்டு மகிழ்கின்ற அவருடைய கணவனார் மிகுந்த சுவை உடையதாக இருப்பதால் மற்றொரு கனியும் தருக என்று கேட்கின்றார்.
               
சிவபக்தையான அம்மையாரோ இறைவனிடம்  விரும்பி கேட்க இறைவனும் அதனை கொடுத்து மகிழ்கின்றார் முந்தைய கனியை காட்டிலும் இக்கனி மிகுந்த சுவையுடையதாக  இருப்பதால் அவரின் கணவர் அதற்குண்டான விளக்கத்தைக் கேட்க அப்பொழுது நடந்த கதையினை அம்மையார் கணவனிடம் விவரிக்கின்றார். இதனைக் கேட்ட அவருடைய கணவனான பிரம்மதத்தனும் இவர் தெய்வப் பெண் என்று அவரை வணங்கி வழிபட்டு நிற்கின்றார் பிறகு அவரோடு வாழ்வதையும் தவிர்த்து, அவர் வணிகம் செய்ய பாண்டிய நாடு செல்கின்றார். அங்கே வேறொரு மணக்கின்றார் பின்னர் மனைவியுடன் மக்களுடன் வந்து அவரது பாதங்களில் விழுந்து வணங்குகின்றார்.

பேய் உருவம் வேண்டுதல்
               
இதனை கண்டு வருத்த  முற்று சிவபெருமானிடம் தன் வனப்பு நீங்கி பேய் உருவம் வேண்டி அதனை அடைகிறார். தேவர்கள் இதனை கண்டு பூமழை பொழிகின்றனர். இறைவன் மீது கொண்ட பக்தியின் காரணமாக அற்புதத் திருவந்தாதி எனும் திருப்பதிகங்களையும் திருவிரட்டை  மணிமாலையையும் அவர் எழுதுகின்றார். இப்பாடல்களில் இறைவன் காண இவர் தலையினால் நடந்து செல்கின்றார் இதனை கண்ட  பார்வதி தேவியோ இவ்வாறு நடந்து வரும் இப்பெண்மணி யாரோ? என்று இறைவனிடம் கேட்க இறைவனும் அவரின் கதையை கூறுவதாக இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் அப்பா என்று இறைவனோ அம்மை  என்று அழைக்கின்றார்.  இறைவனின் பாதம் பணிகின்றார் மீண்டும் பிறவா வரம் கேட்டு திருவாலங்காட்டில்  திருநடனம்  புரியும்  சிவன் இடத்தில் பாடி பரவி இறைவனிடம் வேண்டி நிற்கின்றார். இவரின் பாடல்கள் முழுவதும் தந்தையும் மகளும் ஆக  நின்று  இறைவனிடம்  தன்னுடைய வரத்தை கேட்டு அருளுவதாகவும் அற்புதமான அந்தாதியாகவும் இவை படைக்கப்பட்டுள்ளது ஜோதி வடிவாக காட்சி தருகிறார்.

அற்புத திருவந்தாதி
              
திருவந்தாதி அன்பு, அருள்திறம், வீரச்செயல்கள், சரணாகதி நிலை, சிவனே முழுமுதற் கடவுள் என தன்னை ஆட்கொண்டு அருளிய அனைத்தையும் தனது கருத்த கண்டனிடம் அருமையாக படைக்கின்றார். படைப்பினால் ஆணவம் கொண்ட  பிரம்மனையும்  அவ்வாணவத்தை   அழிக்க நினைக்கின்ற தற்பெருமை கொண்ட திருமாலும் இருவருக்கும் இடையே நடக்கக்கூடிய வாக்குவாதத்தில் அவர்களுக்கு இடையே யார் பெரியவர் என்பதை காண்பிப்பதற்காக சிவபெருமானிடம் வருகின்றனர். சிவனோ தன்னுடைய அடியையும் முடியையும் காண்பார் யாரோ அவரே  ஜோதி  வடிவாக   
சரணாகதி
   இறைவனும் ஜோதி  வடிவாக   நிற்க  பிரம்மாவும்  திருமாலும் அடியும், முடியும் காணத் தேடுகின்றனர் பின்னர் திருமால் தான் தோல்வியுற்றதற்காக இறைவனிடம் வந்து மன்னிப்பும் கேட்கின்றார் ஆனால் ஆணவம் கொண்ட பிரம்மனோ தாழம்பூவினை தனக்கு சான்றாக அழைத்துக் கொண்டு வருகின்றார் தான் உச்சி கண்டதாகவும் அதற்குச் சான்று தாழம்பூ என்றும் குறிப்பிடுகின்றார். இறைவன் இதற்காக பிரம்மனுக்கு தண்டனையும் வழங்கி அவருடைய ஒரு தலையணை கொய்தும் எறிகின்றார், இதனை எல்லாம் மிக அற்புதமாக அம்மையார் அவர்கள் தன்னுடைய பாடல்களில்  வடித்திருக்கின்றார்.

முரண்பட்ட நிலை
                 
இது மட்டுமல்ல திருநீறு பூசிக் கொண்டு மயானத்தில் நடனமிடும் இறைவா என்று அவர் இறைவனிடம் தன்னுடைய முரண்பட்ட நியாயத்தைக் கேட்கின்றார் கபாலம் ஏந்தி பிச்சை என்று கேட்கிறாயே என்றும் மனம் வருந்திக் கூறுகின்றார். இறைவனையே நினைப்பவர்  நெஞ்சம் மீண்டும் பிறப்பதில்லை என்றும் விளக்குகின்றார் ஏன் இன்னும் அருளைத் தராமல் என்னை இவ்வாறு செய்திருக்கிறாய் என்று வினாவவும் துடிக்கின்றார் உன்னுடைய வடிவம் யாது உன் வடிவம் தெரியாமலே நான் உன்னிடம் அடிமையாகி விட்டேன் என்றும் தன்னுடைய புலம்பலைத் தெரிவிக்கின்றார். அடியும் முடியும் தேடும்பொழுது நீ எங்கே  ஒளிந்து  இருந்தீர்  என்றும்  வினவுகின்றார்.

அச்ச நிலை
                
சுடுகாட்டில் அக்கனியில் நடனமாடும் இறைவா அவ்வாறு ஆடுகையில் நீ பார்வதி தேவியை உடன் அழைத்து செல்ல வேண்டாம் என்றும் அவளோ பயப்படுவாள் என்றும் இவர் அச்சப்படுகின்றார். சிவனின் தலைமுடியில் வீற்றிற்கும் வெண்மையான நிறம் உடைய கங்கையை மேகம் போலத் தோன்றுகிறது  என்றும்  ஆனந்தமயமாகக்  குறிப்பிடுகின்றார்.

அன்பின் நிலை
                
நிலவில் தோன்றும் கருமை இறைவனிடம் உள்ள கண்டச்சுவாலையைக் குறிப்பிடுகின்றது என்றும் யானையின் தோலை ஆடையாக அணிந்து பொன்மாலை போன்ற அழகிய எழிலைத் தரும் இறைவா உம்மை வணங்குவதில் தவறு ஏது என்றும் குறிப்பிடுகின்றார். ஆகாய நட்சத்திரங்களை இறைவன் ஜட முடியைப் போன்று விளங்குகின்றது  என்றும் குறிப்பிடுகின்றார். ஆகாய நட்சத்திரங்களைப்  போன்ற இறைவனின் ஜட முடியை வர்ணிக்கின்றார் அதில்  தோன்றுகின்ற சந்திரனையும் பாம்புகளையும் நட்சத்திரங்களாகப் ஒளிர்வதாகக் காட்டுகின்றார். இறைவனின் சோதி  வடிவம் அடியார்க்குப் பொன் போலவும் அல்லாதவருக்கு நெருப்பு கனலாகவும் தோன்றுவதாக அம்மையார் தன் மனதில் இணைந்திருக்கும் இறைவனின் உருவத்தை மேலும் கற்பனை செய்து அணிகலன்கள் உடல் உறுப்புகள் மீதும் ஏற்றிக் கூறி தனது கற்பனை வளத்தையும் அன்பு கொண்ட நிலை என்னும் ஆழமான பக்தி பெருக்கினையும் சான்றாக அமைக்கின்றார்.
 
திருவிரட்டை மணிமாலை
                   
இறைவனை வணங்கிச் சேரும் முறையினை விரிவாகப் பேசுகிறார். சிவனைத் தவிர வேறு தெய்வம் ஏதுமில்லை என்று கூறுவது அவரின் நம்பிக்கையைக் காட்டுகிறது பிறை சந்திரனையும் எருக்கம் மலர் மாலைகளையும் சூடிய சிவனை வழிபட்டால் பிறவி தனை ஒழித்து வீடு வேறு அடையலாம் என்கிறார் அடியார். அன்பு கொண்டு செய்கின்ற எவ்விதப் பூசனையேனும் ஏற்றுக் கொள்பவன் என்கிறார் சான்றாகக் கண்ணப்பரையும், சாக்கியரையும், கணம் புல்லர் நமி நந்தி ஆகியோரைச் சுட்டுகின்றார். இறைவனிடம் அடியார்கள் உம்மை வணங்கும் நேரத்தில் அச்சம் தரும் பாம்பினைச் சூட வேண்டாம் என்றும் குறிப்பிடுகின்றார். அடியார்களைக் கண்டவுடன் வணங்குபவர்களின் தீவினைகள் முற்பிறப்பின் ஊழ்வினையின் தீமைகள் யாவும் விலகி ஓடும் என்றும் கூறுகின்றார். உலக பற்றினை அறுத்திட விளைந்திடும் அடியாரை வணங்குதலே சிறந்தது என்றும் உன்னுடைய ஞானப்பார்வையை அருள்வாய் என்றும் குறிப்பிடுகின்றார். இவரின் பாடல்கள் நகைச்சுவை கொண்டதாகவும் எளிமை மிக்கதாகவும் விளங்குகின்றது சான்றாகக் கங்கையைத் தலையில் சூடியுள்ளது பார்வதி தேவி  காண நேர்ந்தால் யார் எனக்  கேட்க மாட்டார்களா? என்றும் கேள்வியினை எழுப்புகிறார்.
              
அற்புதத் திருவந்தாதியில் இறைச் சிந்தனையையும் இலக்கியச் சுவையையும் சம அளவில் கலந்து கொடுத்திருக்கிறார். அம்மையாரின் பண்பட்ட நிலையை அறியத் திரு இரட்டை மணிமாலை உதவுகிறது இறைவன் எனது பிறவிப் பிணியை நீக்கவில்லை, என்றாலும் இரக்கம் கொள்ளாவிட்டாலும், வழிபாடு செய்ய வழிகாட்ட இல்லை ஆயினும் அவனை வணங்குவதனை நான் நிறுத்தேன் என்றும், சிறு தெய்வங்களுக்கு அடிமையாக மாட்டோம் என்றும் குறிப்பிடுகின்றார் எங்களின் துன்பங்களுக்குச் செவிசாய்க்காமல் இருப்பது ஏன் என்றும் வினாக்களைத் தொடுக்கின்ற அவர் என் மனத்தில் உள்ளான் அவனை வணங்குவதால் என் மனம் தூய்மை அடைந்தது மழு ஆயுதத்தை கையில் ஏந்தியவன் இறக்கம் கொண்டவன் இனிமையானவன் அவனை வணங்கும்போது என்னுடைய எண்ணம் மகிழ்கின்றது.  குளிர்ச்சி விரும்பிய இறைவனை எதனுடனும் ஒப்புமை கூற இயலாது என்றும் குறிப்பிடுகிறார். இறைவன் கழுத்தில் அணிந்திருக்கும் பாம்பினைப் பாதாள உலகத்திற்குச் சென்றுவிடச் செய்யும்படியாக சொல்ல இயலாதா? என்றும் கேட்கின்றார். காரணம்  யாகம்  செய்பவர்  மனத்தில்  வாழும்  வணங்குபவர்களுக்கு  எல்லாம் சோதியாய் தோன்றி அருள் செய்யும் இறைவனை கைலாய மலையினைப் பெயர்த் தெடுத்த ராவணனை தன் கால் விரலால் நசுக்கிய என் தலைவனை எவ்வாறு அழைப்பது என்றெல்லாம் அவர் பக்தியோடு புலம்புகின்றார்.

இலக்கியச்சுவை
                  
எப்பொழுதும் தூய்மை பொருந்தியவன் 21 உலகங்கள் நிறைந்திருப்பவன் என உள்ளம் உருக உணர்கின்ற அறிவு எளிதாக எனக்கு மட்டும் எப்படிக் கிடைத்தது, அனைத்து உயிர்களின் மனதிலும் நிறைந்திருப்பவன் உயிரோடு உயிராக இணைந்து உயிர்களை ஆள்பவன் அறிவின் வடிவாகத் தோன்றுபவன் இருளை ஒத்த கழுத்தினை உடையவன் சூடிய பிறை  அணிந்திருக்கும் பாம்பு விழுங்க வருவது போல் உள்ளது பாரும் என்றும் குறிப்பிடுகின்றார். என் தந்தையாக இருப்பவரின் மனம் என் மீது இரக்கம் கொள்ளவில்லை என்றாலும் நான் வருந்தி இறைவனிடமே சரணாகதி அடைவேன் என்றும் குறிப்பிடுகின்றார் சோதி வடிவேல் இடைவிடாமல் தோன்றி மனதில் ஒளிந்து கொண்டிருக்கிறது என்றும் குறிப்பிடுகிறார்.
                  
இறைவனின் நீண்ட சுருண்ட சடை முடி பொன்னால் செய்யப்பட்ட மூங்கிலைப் போல மின்னுகிறது என்றும் பொன் அணிகலன்கள் மட்டுமே அணியலாமே எதற்காக இந்த பாம்பும் இந்த பிறைகளும் என்றும் குறிப்பிடுகிறார். உடம்பில் நீறு பூசி எழும்பு மாலையை அணிந்து பேய் வடிவம் கொண்டு இருந்தாலும் சிவபெருமானை உணர்ந்த பிற சமயத்தாரும் தலைவணங்கி பணிவர் எவ்வகையில் இறைவனை வணங்குகிறார்கள் என்று நினைத்த திருவுருவிலேயே தோன்றி அருள் செய்வான். கொன்றை மாலையையும்,  கங்கையும் சூடி இருக்கும் இறைவனே நீங்கள் எப்பொழுதும் பாம்பினை அணிந்து கொள்ளாமல் விளக்கவும் உம்மை வணங்க வரும் அடியார்கள் அச்சப்படுவார்கள் என்றும் குறிப்பிடுகிறார். திருவிரட்டை மணிமாலை இறைவனைப் பற்றிய தன்னுடைய எண்ணங்களை அம்மையார் பதிவு செய்துள்ள பாங்கு அவர் இறைவன் மீது கொண்ட அன்பிற்கு எடுத்துக்காட்டாக திகழ்கின்றது. இறைவனை முழுமையான பொருள் என்று உணர்ந்த அம்மையார் சிவன் மீதான தன்னுடைய அன்பை பதிவு செய்கின்றார் அற்புத திருவந்தாதிகள் இறை சிந்தனைகளையும் இலக்கிய சுவைகளையும் சம அளவில் தந்திருக்கிறார் அச்சுவைகள் ஒருவாராக அம்மையாருக்கு இறைவன் மீது கொண்டிருக்கும் ஈடுபாட்டினை நமக்கு சிறப்புரை காட்டுகின்றது அடியார்கள் வணங்குகின்ற சிறப்பினையும் அவ்வாறு வணங்குவதால் ஏற்படுகின்ற வீடு பேற்றிணையும் அருள் கிடைக்காமல் வாடுகின்ற நிலை என்னும் தன்னுடைய பாடல்களில் அவர் விரிவாகவும் விளக்கமாகவும் எடுத்துக் கூறி இருக்கின்றார் அம்மையாரின் பண்பட்ட மனநிலையனை அறிந்து கொள்ள உதவுகிறது.

வீடு பேறு 
                
பிறவித் துன்பத்தினை நீக்குபவன் அடியார்கள் பிற சமயங்களில் ஆண்டு விடாமல் காப்பவன் அடியவர்களை துன்புறுத்துபவர்களை தான் தண்டிப்பவன் உலக உயிர்களுக்கு இன்பத்தை கொடுப்பவன் வேதப்பொருளானவன் திருவுருங்களை எதிர்த்தவன் மார்க்கண்டேயனுக்காக எமனை உதைத்தவன் என்று அம்மையாருடைய கருத்து நிலைகள் இறைவனின் மீது கொண்டிருக்கும் ஈடுபாட்டினை மெய்ப்பிக்கின்றன. தங்கத்தின் நிறத்தை போன்றவனே உன்னுடைய காளை வாகனம் நடந்து சென்றால் உலகம் அச்சம் கொள்ளும் கண்களால் பார்த்தால் திசைகள் எரிந்து போகும் உரசி கொண்டு சென்றால் உலக வருத்தங்களும் அதோடு அல்லாமல் மலையோடு போர் செய்யும் சிங்கமோ மேகத்தில் தோன்றும் இடியோ கோபமுடைய ஆண் புலியோ நீ எனக்கு பொருத்தமான ஒன்றை சொல்லி அருள வேண்டும் அப்பா என்றும் தன்னுடைய வருத்தத்தையும் குறிப்பிடுகின்றார்.
                
மனதை விட்டு நீங்காத ஆசையினாலும் நெகிழ்வினாலும் காரைக்காலில் தோன்றிய இப்புனிதவதி ஆகிய மெய்யினால் சொல்லப்பட்ட பெருமை பொருந்திய வெண்பாவால் இயன்ற அற்புத திருவாதியே முறைப்படியாக பாடுகின்றவர்கள் எப்போதும் அன்போடு இறைவனோடு சிவன் பதம் சிவனை அடைவார்கள் என்றும் பிறவி துன்பம் நீக்கும்படியாக வேண்டிக் கொள்வார்கள் என்றும் இவர் தன்னுடைய திருவருளை முடித்திருக்கின்றார்.வண்டுகள் முயற்சி சிதைக்கின்ற கொன்றை மலர்கள் நிறைந்த சோலையில் தங்கி இருந்துவோம். என்னும் மந்திரத்தால் ரீங்காரம் செய்து கொண்டு தான் வீட்டிற்கும் கொன்றை மலரையும் நாகம் தங்கி இருந்த மூச்சுவிடும் செம்மை நிறம் பொருந்திய பொன் போன்ற சடையினையும் நீண்ட சடை முடிகளையும் உடைய இறைவன் உலக பொருள்களுக்கு எல்லாம் தலைவன் என்று தன்னை வணங்கி பணிபவர்களின் துன்பங்களை கண்டு பொறுமையோடு இருக்க மாட்டான் என்றும் கூறுகின்றபடி எல்லா மனங்களும் இறைவனாக விளங்குபவன் சிவன் என்று அறிந்து கொள்வீரர்களாக என்றும் குறிப்பிடுகின்றார்.
              
இறைவா நீயே எனக்கு எல்லாம் என்று அடிமையானவர்களை பிற சமயங்கள் என்னும் மீ இயலாத படுகுழியில் விழுந்து விடாமல் முன்தோன்றி காத்தருளும் வலிமை உடையவனே சிறப்படைய பொன்னால் ஆகிய அனைவரும் பொன்னால் ஆகிய அணிகலன்களை அணிந்தவனோ அருள் புரிவாயாக பஞ்ச பூதங்களின் வடிவாக இறைவனைக் காணும் இவ்வம்மையாரின் பாடல்கள் பதினோராம் திருமுறையில் இரண்டாவதாக இடம் பெற்றுள்ளது. தேவார காலத்திற்கு முன்பே இசைத்தமிழால் சிவபெருமானைப் பாடியவர். அந்தாதி என்னும் இலக்கண முறையை அறிமுகப்படுத்தியவர். அம்மையின் அடியொற்றி வாழ்வோமாக.

துணை நூற்பட்டியல்

காரைக்காலம்மையார் படைப்புகள்
 மூலமும் உரையும்

முனைவர்.கதிர் முருகு
கு.சுபாஷினி.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்,
ச. கனிமொழி,

உதவிப் போராசிரியர்,

தமிழ்த் துறை,

கோபி கலை அறிவியல்  கல்லூரி,

கோபிசெட்டிபாளையம்.
 

Leave a Reply