Abstract
In literature, the palm tree is considered especially significant to the Tamils. Among useful trees, the palm is unique in that every part of it, from tip to root, serves a purpose. It has the ability to survive even in dry lands. It is also the state tree of Tamil Nadu. All its parts provide a wide range of benefits, such as food, shelter, decorative items, and tools. Its leaves, fruit, flowers, wood, and seeds are all useful to people as sources of food and medicine. From the Sangam age to the present day, the palm tree has played an important role in human life. Its distinctiveness compared to other trees can be seen in the usefulness of each of its parts. Whether it is planted or cut down, it always transforms into something beneficial for people.
“இலக்கியங்களில் பனைமரத்தின் பயன்கள்”
ஆய்வுச்சுருக்கம்
இலக்கியத்தில்பனை மரத்தின் பயன்கள் தமிழர்களுக்கு சிறப்பு வாய்ந்தவனாக அமைந்துள்ளது. நுனி முதல் அடி வரை அனைத்து பாகங்களும் பயனுள்ள மரங்களில் பனை மரமும் ஒன்று. வறண்ட நிலத்திலும் தன்னைக் காத்துக் கொள்ளும் தன்மை வாய்ந்தவை. தமிழ்நாட்டின் மாநில மரமாகும். இவை அனைத்து பாகங்களும் உணவு, உறைவிடம், அழகிய பொருட்கள் மற்றும் கருவிகள் என பல்வேறு பயன்கள் தரக்கூடியவையாக அமைந்துள்ளது. இதன் இலை, காய், பூ, மரம், விதை போன்ற அனைத்து பொருள்களும் மக்களுக்கு உணவு பொருட்களாகவும், மருந்து பொருட்களாகவும் பயனளிக்கின்றது. சங்க காலம் முதல் இக்காலம் வரை மனிதர்களின் பயன்பாட்டில் பனைமரம் ஒரு முக்கியப் பங்கினை வைக்கின்றது. மற்ற மரங்களின் இல்லாத சிறப்பு பனைமரத்தின் ஒவ்வொரு பகுதியிலும் நாம் உணரலாம். அதை விதைத்தால் அதை அழித்தாலும் அது மக்களுக்கு பயனுள்ளப் பொருளாகமாறிவிடும் தன்மையுடையது
முன்னுரை
இயற்கை படைப்பில் தனித்துவம் வாய்ந்த மரமாகப் பனைமரம் கருதப்படுகிறது தமிழர்களுக்கு மிகுந்த பயன்களைத் தரக்கூடியவை பனை மரத்தின் இருக்கக்கூடிய பொருள்கள் பதநீர், நுங்கு, பனங்கிழங்கு போன்ற உணவு சார்ந்த பொருட்களும் ஓலைச்சுவடி,வீட்டு உபயோகப் பொருட்களும், அலங்காரப் பொருட்களும் மற்றும் இசைக்கருவிகள் ஆகிய பயன்பாடுகளில் பனை மரங்கள் தங்களுடைய பயன்களை தருகின்றது. தமிழர்களின் கலாச்சார அடையாளம் மற்றும் கற்பகத்தரு என அழைக்கப்படும் சிறப்பு வாய்ந்த மரமாகும்.
விதைப்பு முறைகள்
வறட்சியானப் பகுதியான தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை மாவட்டத்தில் அதிக அளவில் பனை மரங்கள் வளர்க்கப்படுகின்றன. நன்கு காய்ந்த பனங்கொட்டையை விதைத்தால் மூன்று மாதங்களில் பனங்கன்று வளரும். ஒன்பது முதல் பத்து ஆண்டுகளில் பருவத்திற்கு வந்து விடும். நீர்ப்பாசன வசதி இருந்தால் விரைவில் வளர்ந்து விடும் 120 ஆண்டுகள் அடையாளம் காண முடியும்.
ஆண், பெண்பனை
பனை மரங்களில் ஆண் பனையை அழகுபணை என்றும் பெண் பனையைப் பருவப்பனை என்றும் குறிப்பிடுவர்.பாளை மட்டும் வெளியே நீட்டி கொண்டிருக்கும் பனை ஆண் பனை இதில் நுங்கு காய்க்காது. பெண் பனையில் மட்டும் தான் நுங்கு காய்க்கும். பதநீர் அதிகம் கிடைக்கும். ஒரு மரத்தில் ஒரு ஆண்டுக்கு நான்கு புது ஓலைகள் வளரும். 6 முதல் 12 பாளைகள் தள்ளும் 100 முதல் 120 பனம்பழங்கள் காய்க்கும் 4 பழைய ஓலைகள் கீழே விழும்.இதனைநாலடியார்பாடலில்
“நடுவூருள் வேதிகை சுற்றுக்கோட் புக்க
படுபனை யென்னர் பலர்நச்ச வாழ்வார்;
குடிகொழுத்தக் கண்ணும் கொடுத்துண்ணா மாக்கள்
இடுகாட்டுள் ஏற்றைப் பனை.ஒறுப்பின்யான்ஒறுப்பது”1
பனை மரத்தை விரும்பி வளர்த்துள்ளனர்.பெண் பனையே பெரிதும் போற்றி வளர்த்தனர். ஆண் பனையும் மக்கள் புழக்கம் இல்லாத இடங்களில் மட்டுமே இருக்கும். பெண் பணியானது இருக்கும் இடத்தில் அதைச் சுற்றிலும் திண்ணை போன்ற கட்டைய கட்டி வைப்பார்கள்.
மடலேறும் முறை
சங்ககாலத்தில் காதலில் தோல்வியுற்ற தலைவன் பனைமடலால் செய்யப்பட்ட குதிரை மீது ஏறி ஊர்வலம் வரும் முறையே மடல் ஏறும் முறையாகும். சங்க இலக்கியத்தின் வழக்கமாக மடலேறும் முறை இருந்தது.இவை தொல்காப்பியத்தில் ஏறிய மடல் திறத்தை பொருந்தா காமத்தின் பார்ப்பதும் பெருந்துணையில் அடக்குவர் எனவும்,
“ஏறியமடல்திறம்இளமை தீர்த்திறம்
தேறுதல் ஒழிந்த காமத்து மிகு திறம்
மிக்க காமத்து மிடலொடு தொகை இச்
செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே”2
பொருப்பாவில் பெருந்துணை காமத்தின் நிலையே விளக்குகின்றது. பனை மட்டையை விலங்கு போல் செய்து அதனை குதிரை போல் செய்து தலைவனை அதில் மேல் ஏறி வருதலால் மடல் ஏறுதல் என பெயர் பெற்றது. குதிரை செய்வதற்காக பனை மரத்தை பயன்படுத்தினர்.
பனையின் பயன்கள்
சங்க இலக்கியத்தில் போந்தை என்ற சொல் பயன்படுத்தின சேர மன்னர்களின் குல சின்னம்ஆகும் சேர மன்னன் பனைப்பூ மாலையை அணிந்திருந்தான். தமிழரின் வீரத்தின் அடையாளமாகவும் விளங்கின. பனை, பெண்ணை,போந்தை, மடலை, வேனில் போன்ற பெயர்களில் பனைமரம்இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பனை மரத்தின் ஒவ்வொரு பகுதிகளும் நமக்கு பயனுள்ளவை. அவற்றில் பனை ஓலை,பதநீர், நுங்கு,பனம் பூ,கள், பனம்பழம்,பனங்கிழங்கு, மரத்தின் பகுதிகள் வீட்டு உபயோகப்பொருள் செய்வதற்கு, அலங்காரப் பொருட்கள், கூரை மேல் பனை வீடுகளாகவும் அடுக்கடுக்காகத்தன்னுடையப் பயன்களை மக்களுக்கு கொடுக்கும் ஒரு காவல் தெய்வமாக பனை மரங்கள் வளர்க்கப்படுகின்றன. இதன்பயனை வள்ளுவர்
“திணைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன் தெரிவார். “3
திணை அளவு உதவி செய்தாலும் அதனை பனைமரம் போல்பெறியதாக எண்ணம் வேண்டும் என்பதே உணர்த்தி உள்ளார். சங்ககாலத்தில் ஓலைச்சுவடிகளின் பயன்பாடுகள் மிகுந்தளவில் இருந்து உள்ளது.ஓலைகளைப்பதப்படுத்தி அதில் எழுத்துக்களை பொறித்து தொகுக்கப்படும் பழங்கால கையெழுத்துப் பிரதியாகும். இவ் ஓலைச்சுவடிகளில் எழுத்து ஆணிகள் தகவல்கள், இலக்கியங்களின் பயன்கள், ஆவணங்கள் ஆகியவற்றை ஓலைகளே எழுதி வந்தனர்.
பதநீர்
இலக்கியத்தில் பதநீர் பயன்பாடு குறிப்பிடப்படவில்லை என்றாலும்,கிராமப்புற இலக்கியங்களின் பதநீர் பற்றியச் செய்திகள் இடம் பெற்று இருக்கிறது.இவை உடல் வெப்பத்தை தணிக்கும் ஒரு பானகமாகத் திகழ்கிறது. பதநீர் என்பது தென்னை, பனை கீத்துல முதலியவற்றில் பூப்பாளையிலிருந்து வடித்தெடுக்கப்படும் திரவம் பதநீராகும். கிமு முதல் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று நெடுமலன் என்பவன் சமண முனிவர்களுக்கு கற்படுக்கை அமைத்துக் கொடுத்த நிகழ்வைபாணிதவணிகன்நெடுமலன்இவை அழகர் மலையில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் பிராமி கல்வெட்டுகள் ஆகும். பாணிதம் என்பது பனைகளிலிருந்து கிடைக்கப்பெறும் பதநீரைக் காய்ச்சி உருக்குவதால் கிடைக்கும் இனிப்பான பாகையைக் குறிக்கும். பதநீர் ஒரு மருத்துவம் குணம் கொண்டவையாகும். உடல் சூடு, வயிற்றுப்புண், மூலசூடு, சிறுநீரகம் நோய்கள், ரத்தசோகை, கல்லீரல், மண்ணீரல் பாதிப்புகள் இவற்றையெல்லாம் போக்கக்கூடிய அருமருந்தாக பயன்படுகிறது. மேலும் பாஸ்பரஸ், மேக்னீசியம், புரதச்சத்து, துத்தநாகம், கால்சியம், வைட்டமின் சி, பி, தையாமின், நிக்கோலிக் அமிலம் போன்ற சத்துக்கள் பதநீரில் உள்ளன.
பனைமரத்தின் தமிழரின்மரபு
பனை மரங்கள் தமிழர்களின் மண்ணை ஆட்சி செய்த மன்னர்களின் பொருளாதாரச் சிறப்பினை மேம்படுத்துவதாகும். சோழர் ஆட்சி காலத்தில் பனையும் தென்னையும் வளர்ப்பதற்கான உரிமை வழங்கினார்கள். சோழர்கள் ஆட்சி காலத்தில் வருவாய் பெருக்குவதற்கும் பனைத் தொழில் சிறப்பு வாய்ந்ததாக அமைந்துள்ளது. சேர மன்னர்கள் பனைமரத்தைத்தங்களின் அடையாளச் சின்னமாக பயன்படுத்தியிருக்கிறார்கள். தமிழர்களின் வீரத்தைப் பறைசாற்றிய தகைச்சால்மன்னர்களானச் சேரன் செங்குட்டுவன், பெருஞ்சேரல், இளம் பொறை, அதியமான் முதலியார் பனம் பூ என்ற போந்தை மாலையை அணிந்ததாகச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றது. சிறப்பு வாய்ந்த பயனே அளிக்கும் பனை மரத்தை வள்ளுவர்,
“பயன்மரம்உள்ளுர்பழுத்தற்றால்செல்வம்
நயனுடையான்கட்படின்”4
என்ற குறளில் பனைமரம் என்ற இடத்தில் பயன் மரம் என்ற சொல்லை கையாண்டு பனைமரத்தின் சிறப்புகளைகூறியுள்ளார். பனை மரத்தின் ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு சிறப்பு வாய்ந்தபயன்களை தருகின்றது.
தமிழரின்கள் பானம்
மதுபானங்களில்ஒன்று கள் உண்ணுதல். பதநீரை புளிக்க வைத்து அதில் சுண்ணாம்பு சேர்த்து கள்பானத்தை தயாரிக்கிறார்கள். சங்க இலக்கியங்களில் கல்லை தீம்பிழி என்ற சொல்லால் குறிப்பிடுகின்றன. தமிழர்களின் வழிபாட்டில் நடுக்கல் வழிபாடு ஒரு முக்கிய வழிபாடாகக்கருதப்படுகின்றது. நடுகல் வழிபாட்டில் கள்ளை வைத்து வழிபாடும் வழக்கம் இருப்பதை அறியலாம். வழிபாட்டில் மட்டுமின்றி இறப்புச் சடங்குகளிலும் கல்லை படைத்துள்ள செய்தி புறநானூற்றுப் பாடலில் கூறுகின்றனர். அவை
“இல்லாகியரேகாலைமாலை
அல்லாகியர்யான் வாழும்நாளே
நடுகல்பீலிசூட்டிநார்அரி
சிறுகலத்துவகுப்பவும்
கொள்வான்…”………. 5
அதியமான் இறந்தபோது அவருக்கு நடு கல் வைத்து கள்ளும் படைத்து வழிபட்டதை இப்பாடல் விளக்குகின்றது. என்றும் பல கிராமங்களில் கள் உண்ணும் பழக்கம் இருப்பதை நாம் உணரலாம்.
முடிவுரை
பனை மரத்தின் பயன்கள் நுனி முதல் பாதம் வரை அனைத்து பகுதிகளும் மனிதர்களுக்குப் பயனுள்ள வகையில் அமைந்துள்ள ஒரு அரிய வகை மரமாகும்.உணவுப் பொருளாகவும்,கலைப் பொருளாகவும் பயன்படுகின்றது. பனை ஓலைகள், நுங்கு, பனங்கிழங்கு, பதநீர்,கள், ஓலைச்சுவடி, வீட்டு அலங்கார பொருள்கள், ஆகிய பொருட்களை மக்கள் பயன்படுத்துகின்றன.மன்னர்கள் போற்றக்கூடிய அரிய வகை மரமாகும். இயற்கை படைப்பில் பனைமரம் ஓர் அரிய மரமாகும். பனை மரத்தின் பயன்களினால் வேளாண்மை துறையிலும் வாணிபத் துறையிலும் பெரும் பங்கினை வைக்கிறது. வெளிநாட்டு வாணிப வளர்ச்சிக்கு பனைமரம் பெருந்துணையாய் இருக்கின்றது. அத்தகைய சிறப்புமிக்க பனை மரத்தை பாதுகாப்பது நமது கடமையாகும்.
சான்றெண் விளக்கம்
1. நாலடியார் பாடல் எண் –96
2. தொல்காப்பியம் பொருட்பால் –54 நூற்பா
3. திருக்குறள் குறள் எண் -104
4. திருக்குறள் குறள் எண் -216
5. புறநானூறு பாடல் எண் -23
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர். சு. இளவரசி
உதவிப்பேராசிரியர்
தமிழாய்வுத்துறை
ஜமால்முகமதுகல்லூரி, திருச்சி.