கோமனம் கட்டிய ராஜாக்கள் நாங்கள்
மாட்டு வண்டியில் தேர்வலம் வருவோம்
வைக்கோல் கட்டில் அரண்மனை கட்டி
நெல் குவியலில் கோபுரம் அமைத்து
ஏர்கழப்பை செங்கோல் ஆக
எட்டு திக்கும் எங்கள் கொடியே
தையில் மட்டும்..!
பத்தாயம் எங்கள் பாரத வங்கி
குதிர் எங்கள் குட்டி உண்டியல்
சேர்-ல் கூட சேமிப்போம்
ஞாயிறில் நெல் விற்ககூட யோசிப்போம்..!
கதிரவனும் காவிரியும்
எங்களை காக்கும் கடவுள்..!
பசுவும் காளையும்
எங்களின் காதலி..!
மண்புழு எங்கள் மழலை
பறவை எங்களின் பாச உறவுகள்..!
இத்தனையும் நடக்கும் தையிலே
தை போன பின்னே
விவசாயி வாழ வழியில்லே..!
கவிதையின் ஆசிரியர்
சு.தமிழ்ச்செல்வன்
முனைவர் பட்ட ஆய்வாளர்
தமிழ்த்துறை
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம்
திருவாரூர் -610005.
மேலும் பார்க்க..