பிரியமானதோழி|சிறுகதை|முனைவர் ஆ.கௌசல்யா

பிரியமான தோழி -முனைவர் ஆ.கௌசல்யா
     மூங்கில் தாங்கல் என்ற கிராமத்தில் சிறுவயது முதல் கவிதா காவியா இருவரும் தோழிகள். கவிதா அறிவுநுட்பம் நிறைந்தவள்  காவியா கொஞ்சம் வெகுளியானவள்.  கவிதா என்ன சொல்கிறாளோ அதை அப்படியே கேட்டு நடப்பவள்.
           
காவியா பள்ளிக்கூடத்தில் ஆசிரியராகப் பணியாற்றினாள் கவிதாவோ ஒரு கம்பெனியில் வேலை செய்து வந்தாள். காவியா அன்றாட நிகழ்வுகளைக்  கவிதாவிடம் கூறி அவள் கூறும் அறிவுரைகளை ஏற்று நடக்கக்கூடியவள். ஒரு நாள் பள்ளியில் காவியா வகுப்பு முடித்து விட்டு வந்தாள் அவளை அழைத்த தலைமை ஆசிரியர் எந்த காரணமும் இல்லாமல் கடுமையாகத் திட்டுகிறார் காவியாவுக்கு ஒன்றும் புரியவில்லை வருத்தத்துடன் வீடு திரும்பியவள் கவிதாவிடம் பள்ளியில் நடந்ததைக் கூறி மிகவும் வருந்துகிறாள். அதற்கு கவிதா வருந்தாதே உன் தலைமை ஆசிரியருக்கு உன்னைப் பிடிக்காத காரணத்தால் அப்படி நடந்து கொள்கிறார். அதனால் நீ அவர் வியக்கும் வண்ணம் ஏதாவது செய் இதனை நினைத்து சோர்வடையாதே எஎன் காவியாவுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுகிறாள் கவிதா. காவியாவும் தோழியின் அறிவுரை படி நடக்க ஆரம்பிக்கிறாள் ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்டு தன் சொந்தக் கவிதையை வாசித்து பெரும் பாராட்டு வாங்குகிறாள் இதனைக் கேள்வியுற்ற தலைமை ஆசிரியர் காவியாவிடம் உனக்குள் இவ்வளவு திறமை இருக்கா என வியந்து பாராட்டினார் காவியாவுக்கு அளவில்லா மகிழ்ச்சி அடைந்தாள்.
மாலை வீட்டிற்கு வந்ததும் கவிதாவை அழைத்துக் கொண்டு கோவிலுக்குச் செல்கிறாள் . கவிதா ஏன் இவ்வளவு சந்தோசம் எனக் கேட்க பள்ளியில் தலைமையாசிரியர் தன்னைப் பாராட்டியதைக் கூறுகிறாள். கவிதா நான் தான் சொன்னேன் அல்லவா நீ ஏதாவது சாதித்துக் காட்டு அப்போது தான் உனக்குள் இருக்கும் திறமை வெளியில் தெரியும் இன்று திட்டுபவர் ஒரு நாள் பாராட்டி பேசுவார் என்று அதுதான் நடந்துள்ளது. கோவிலிலிருந்து வீட்டிற்கு திரும்பி வரும் வழியில் ஒரு வயதான அம்மா பசியால் வாடி வருவோர் போவோரிடம் சாப்பாடு கேட்கிறாள் அதனைக் கண்ட காவியா அந்த அம்மாவிற்கு கையிலிருந்த முப்பது ரூபாய்க்கு இட்லி வாங்கிக் கொடுத்து விட்டு இருவரும் வந்தனர். இதுபோலவே கவிதாவின் அறிவுரைகளைக் கேட்டு நல்ல வழியில் பல வெற்றிகளை அடைகிறாள். இவ்வாறே காலங்கள் கடந்தன.
ஒருநாள் காவியா பள்ளிக்குச் சென்று விட்டாள் அந்த நேரம் வீட்டில் யாரும் இல்லை கவிதா உடல்நலம் சரியில்லாமல் கம்பெனிக்குச் செல்லவில்லை தூங்கிக் கொண்டிருந்தாள் காவியா வீட்டிலிருந்து ஏதோ ஒரு சத்தம் கேட்டது கவிதா மெதுவாக எழுந்து சென்று பார்த்தாள் காவியாவின் அம்மா மயங்கிய நிலையில் கிடக்க உடனே கவிதா ஒரு ஆட்டோவில் அம்மாவை ஏற்றிக்கொண்டு அருகிலிருந்த மருத்துவமனைக்குச் சென்றாள் அங்கிருந்த மருத்துவர்கள் சோதித்துப் பார்த்து விட்டு அம்மா ரொம்ப வீக்கா இருக்காங்க உடனே ஏ பாசிட்டிவ் இரத்தம் ஏத்த வேண்டும் என்கிறார்கள் கவிதா உடல்நலம் சரியில்லாமல் இருப்பதைப் பொருட்படுத்தாமல் தனது இரத்தமும் அதே வகை இரத்தம் தான் என இரத்தம் கொடுத்து காவியாவின் அம்மாவை காப்பாற்றி விடுகிறாள் மாலை வீட்டிற்கு வந்ததும் காவியா மருத்துவமனை சென்று தன் அம்மாவைப் பார்க்க 
           
அம்மாவும் நடந்ததைக் கூற காவியா கவிதாவை வியப்போடு பார்த்து உன்னைப் போல் ஒரு தோழி எனக்கு கிடைத்தது இறைவன் கொடுத்த வரம் என மகிழ்கிறாள்.பிறகு இருவரும் அம்மாவை வீட்டிற்கு அழைத்து வந்தனர். என்றுமே இணைபிரியாமல் இருந்தனர்.

சிறுகதையின் ஆசிரியர்,

முனைவர் ஆ.கௌசல்யா 

உதவிப் பேராசிரியர்   
 
தமிழ்த் துறை   

   ஜெ.எச்.ஏ.அகர்சன் கல்லூரி 
சென்னை -60

 

Leave a Reply