அவ்வையார், அஞ்சில் அஞ்சியார், அஞ்சியத்தை மகள் நாகையார், அல்லூர் நன்முல்லையார், அணிலாடும் முன்றிலார் ஆதிமந்தி, ஒக்கூர் மாசாத்தியார் , பாரி மகளிர், வெண்ணிக் குயத்தியார், காக்கைபாடினியார், பொன்முடியார் போன்ற இன்னும் பல பெண்பாற் புலவர்கள் ஆற்றிய அரும்பங்கு அளவிடற்கரியது. சில பெண்பாற் புலவர்களின் இயற்பெயர் தனிப்பாடல்களிலோ அத்தொகுப்புகளிலோ குறிப்பிடப்படவில்லை. அவர்கள் பயன்படுத்திய சொற்களிலிருந்து பெயர் வைக்கப்பட்டது. எடுத்துக்காட்டாக, செம்புலம்பற்றி ஒருவர் பாடுகிறார். அக்கவித்திறம் கண்டு செம்புலப் பெயனீரார் என்று பெயர் சூட்டினர்.
’ஈன்று புறந்தருதல் முதற்கடமை’ என்ற பொன்முடியாரின் வரி சமூகத்தில் பெண்ணின் நிலையை அடையாளப்படுத்துகிறது. சமுதாய நலனுக்காகவும், வீரத்துடன் செயல்படவும் ஆண் குழந்தைகளைப் பெற்று தருவதும், அவர்கள் போரில் கொல்லப்படும் போது பெருமிதம் அடைவதும்தான் சிறப்பு என சங்க இலக்கியம் புனைந்துரைக்கின்றன.
தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575
This will close in 20 seconds