வணக்கம். என் பெயர் கோவிந்தசாமி, நான் தமிழகத்தில் திருவண்ணாமலையில் பிறந்தேன். பள்ளி இறுதி வகுப்பாகப் பத்தாம் வகுப்பு வரை பயின்றேன். என்னுடைய அக்கா மகளைத் திருமணம் செய்து கொண்டேன். எனக்கு ஒரு மகன் இருக்கின்றான். நான் எனது குடும்பத்தில் ஒருசில கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து 1995 ஆம் ஆண்டில் ஆந்திர மாநிலத்திற்கு வந்தேன். தன்னந்தனி ஆளாக Care of Platform ஆக என்னுடைய வாழ்க்கையைத் தொடங்கினேன். இன்று (2024 ஆம் ஆண்டு) ஆந்திர மாநிலத்தில் பாபட்லா மாவட்டத்தில் சின்ன காஞ்சம் என்ற ஊரில் ஒரு குறிப்பிடத்தக்க சமூக சேவகர்களில் நானும் ஒருவராவேன். தற்போது சில பொறுப்புகளிலும் உள்ளேன். பல்வேறு அமைப்புகளிடமிருந்தும் நற்சான்றிதழ்கள் பெற்றுள்ளேன். இந்த நிலையினை அடைந்திட உண்மை நேர்மை தன்னலமற்ற சேவை மனப்பான்மை போன்ற அடிப்படை காரணிகளாக என்னை தயார்ப்படுத்திக் கொண்டேன். என்னுடைய வாழ்க்கையானது ஊனமுற்றோர்களுக்கு முன்மாதிரியாக என்னை வளர்த்தெடுத்துள்ளேன். தாய்மொழியாம் தமிழுக்கும் தமிழ் நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் வகையில் வாழ்ந்து வருகின்றேன்.தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575
This will close in 20 seconds


