திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் அருகே உள்ள கிராமத்தில் மேற்கண்ட புகைப்படம் எடுக்கப்பட்டது. இந்த இடத்தைச் சாவடி என்று அழைக்கிறார்கள். ஊருக்குள் செல்லும்முன் சாவடியைத் தாண்டித்தான் செல்ல முடியும். சாவடியில் எப்போதும் மூன்று அல்லது நான்கு பேர் அமர்ந்திருப்பார்கள். ஊருக்குள் ஏன்? எதற்காகச் செல்கின்றோம்? யாரை பார்க்கச் செல்கின்றோம்? எப்போது திரும்பி வருவோம் என்று அவர்களிடம் உறுதி பெற்ற பின்னரே செல்லமுடியும். அவர்களிடம் உறுதி பெறவில்லையென்றால் உள்ள அனுமதிக்க மாட்டார்கள். இது அனைத்துக் காரண காரியங்களுக்கும் பொருந்தும்.
சாவடியில் இருப்பவர்கள் வயது முதிர்ந்தவர்களே அதிகம் இருக்கின்றார்கள். தெளிவான பேச்சு. சாமர்த்தியமான பதில் என நம்மை வியக்க வைக்கின்றார்கள். சாவடியில் செய்தித்தாள்கள் உண்டு. அஞ்சல்காரர்களும் சாவடியில் வந்து கொடுத்துவிட்டு போய்விடுவார்கள். யாரேனும் வெளியூருக்குச் செல்லவிருந்தால் சாவடியில் சொல்லிவிட்டுச் சென்றால் போதும். அவர்களைத் தேடி யார் வந்தாலும் சாவடியில் உள்ளவர்களே பதில் அளித்து திருப்பி அனுப்பி விடுவார்கள்.
ஊருக்குள் என்ன நடக்கின்றது என மொத்த தகவலும் சாவடியில் உள்ளோருக்குத் தெரியும். மொத்தத்தில் சாவடி என்பது ஊருக்கு வாசற்படி எனலாம்.
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் க.லெனின்
உதவிப்பேராசிரியர்,
எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.
Related
சிறப்பு ஐயா…
அருமையான பகிர்வு
நன்றி நண்பரே..
மிக்க நன்றி
கிராமங்களில் சாவடி மிக அவசியம் என்பதை உணர்த்துகிறிர்கள். நன்றி ஐயா.
எங்க ஊரு அரசமரம் போல
உண்மைதான்!
ஆமாம்! ஒவ்வொரு ஊருக்கும் தேவைதான்!!
அருமை… இது பழமையின் அடையாளம்….