இயற்கை சாரல்|ஹைக்கூ|ச. கார்த்திக்

இயற்கை சாரல் - ஹைக்கூ-கார்த்திக்

🌳எந்தவொரு பறவையும்


தன்னுடைய இருப்பிடத்தைத்


தேடி தேடிச் செல்கிறது!


 

🌳நான் எங்குச் சென்றாலும்


எனக்கு முன்


நிழல் செல்கிறது!


 

🌳மழை வந்தால்


ஏரிகள் நிறைவதல்ல


என் வீடு நிறைகிறது!


 

🌳பறவையின் கண்களுக்கு


மனிதன் எல்லாம்


சிறு எறும்பு போல்!


 

🌳புதைத்த பின்னர்


முளைக்கவில்லை


என் வீடு ஜீவன்!


 

🌳 தாயின் முகத்தில் அழுகை


காந்தியின் முகத்தில் சிரிப்பு


இந்த மருத்துவமனை!

 


🌳 மரத்தின் இலைகள்


பூமிக்குச் செல்லும் முன்


காற்றில் நடனமாடுகிறது!


 

🌳மரத்தைச் சுற்றி விழுந்த


இலைகள் காண்போம்


அதை மரத்தின்


துளிர்(கள்) காண்பதில்லை!

 


🌳கடலின் அலைகள்


என் கால் பாதத்தில்

முத்தம் மிட்டு செல்கிறது!


 

🌳கடலில் துள்ளிக்கொண்டிருக்கும்


மீன்கள்


என் வீட்டின் சமையலறையில்


வெந்துக்கொண்டு இருக்கிறது!


 

கவிதையின் ஆசிரியர்


ச. கார்த்திக்


முதுகலைத் தமிழ் முதலாமாண்டு


தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி),

திருப்பத்தூர்.

Leave a Reply