அம்மன் விஸ்வரூபம் சக்தி கொண்டவள்
அம்மனின் திருநாமத்தை உச்சரிக்கும் போது மனதில் தீய எண்ணங்கள் அழியும் அம்மன் படைப்பவள் சக்தி;காப்பவள் சக்தி; அழிப்பவள் சக்தி அபயம் என்று அவளை சரண் புகுந்தால் போதும்.
அம்மனை தேவர்கள் வணங்கும் தேவியானவள்.
சொல்லடி சிவசக்தி
என் அன்னையின் உருவே
சக்தியின் உருவே நீயே தான்
சகலமும் நீயே தான்
எல்லாமே நீயாக இருக்க வேண்டும் சக்தியே
பிரபஞ்சம் உன் கண்ணசைவினால் தான் சுழல்கிறது
எனக்கு உன் அருள் வேண்டும்
உன்னை மறக்காத நாளும் இல்லை
உன்னை வணங்காத நாளும் இல்லை சக்தியே
அனுதினமும் உன்னை நினைத்து துதிக்கிறேன்
உன்னை வணங்கும் போது தான்
துயரங்களில் இருந்து கடந்து வருகிறேன்.
அர்த்தநாரி அம்மன்
சிவனின் பாதியும் சக்தியின் பாதியும் அர்த்தநாரியாக அம்மன் வீற்றிருக்கிறாள்.
மங்கையின் கங்கை அணிந்த மகேஸ்வரன் “அர்த்தநாரியா வித்தகம் செய்யும் அருணாச்சலேஸ்வரர்” திருவடியே சரணம்
சிவனும் சக்தியும் இல்லாமல் இவ்வுலகம் இயங்காது
சிவன் இவ்வுலகத்தை ஆட்டிப் படைப்பவர் சிவனே
சக்தி இவ்வுலகத்தை ஆள வந்தவள்
சக்தியால் தான் இவ்வுலகம் உதித்து அன்பான உயிர்களை அரவணைக்கும் மகா சக்தியானவள்
திருச்செங்கோடு திருத்தேரில் அம்மையும், அப்பனும் நம்மை காண பவனி வருவார்கள்
தேர் வரும் அழகை பார்க்கும் போது கண் குளிரும் மனம் பக்தியில் பரவசமாகும்.
சிவனின் சரிபாதியாக அர்த்தநாரீஸ்வரர் உடலில் அர்த்தநாரி அம்மனாக தேவியாக வீற்றிருக்கிறாள்.
அம்மனின் ஆலயத்தில் நுழைந்தவுடன்
தேகம் சிலிர்க்கும் உள்ளம் பூரிக்கும்.
சமயபுரம் மாரியம்மன்
சமயபுரம் மாரியம்மன்
சிவந்த திருமேனி காட்சி தருபவள்
கஷ்டத்தில் இருக்கும் போது
சமயத்தில் உதவ வருபவளே
உன்னை பார்த்தவுடன் தேகம் சிலிர்க்கிறது
சமயபுர மாரியம்மன் ஊர் மக்களை காக்க ஒரு மண்டலம் பச்சை பட்டினி விரதம் இருக்கிறாள்
பூச்சாட்டுதல் வண்ண மலர்களுடன் அம்மனை பார்க்கும் போது மனம் அமைதியாக இருக்கிறது
அக்னி சட்டி எடுத்து ஆலயத்தை சுற்றி வரும் பக்தர்களுக்கு நினைத்த காரியத்தை நடத்திக் காட்டும் மகா சக்தியானவள்
சமயபுர கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு எண்ணியுடன் வேண்டிய வரத்தை தரும் சக்தியானவள்
ஆடி மாதத்தில் ஆலயங்களில் அபிஷேகம் முடிந்தவுடன் அலங்காரத்தில் கம்பீரமாக வீற்றிருக்கிறாள்
மாவிளக்கில் பசு நெய் ஊற்றி திரி போட்டு ஜோதி வடிவில் அன்னை அருள் பாலிக்கிறாள்
எலுமிச்சையால் மாலை தொடுத்து எலுமிச்சை மாலை அம்மனுக்கு சாற்றும் போது திருமணத்தடை நீக்குவாள்
திருவிழாவில் சமயபுரம் மாரியம்மன் திருத்தேரில் பவனி வருகிறாள்
சமயபுரம் மாரியம்மன் ஆயிரம் கண்ணுடையவள்
அம்மனைப் பார்த்துக் கொண்டு இருக்கணும் போல மனம் ஏங்கும்
பெண்ணின் பாதுகாப்பு குங்குமம் பெண்கள் நெற்றியில் குங்குமம் வைக்கும் போது தீவினைகள் அகலும்
சமயபுர மாரியம்மன் அம்மனை வேண்டிக் கொண்டால் குழந்தை பாக்கியத்தை நிறைவேற்றித் தருவாள்
திருமணத்தடை நீங்கும்
தீராத நோய்களை தீர்த்து வைக்கும் அன்னையாவள்
சமயபுரம் மாரியம்மன் காலடியில் சரணடையுங்கள்
கலியுகத்தில் கண்கண்ட மகா சக்தியானவள்.
மாரியம்மனுக்கு தலைமையாக
சக்தி பீடமாக சமயபுரத்தில்
“சமயபுரம் மாரியம்மன்”
வீற்றிருக்கிறாள்.
சிவந்த மேனி ஆவாள்.
எலுமிச்சை மாலை அணிந்திருக்கிறாள்.
சமயத்தில் வந்து சங்கடங்களை தீர்த்து வைக்கும் மகாசக்தியானவள்.
“மகமாயி சமயபுரத்தாயே
உன் மகளினத்தின் எல்லாமும் நீயே நெற்றியில் குங்குமம் நிறைய வேண்டும் நெஞ்சில் உன் திருநாமம் பதிய வேண்டும்”
வருடத்தில் ஒரு முறை மாசி மாதத்தில் தொடங்கி பங்குனி வரை 28 நாட்கள் அம்மன் பச்சை பட்டினியாக விரதம் இருப்பாள்.
உலக மக்களை காத்து வருபவள்.
சிந்தையில் நிறைந்து இருப்பவள்.
சிதறிய எண்ணங்களை ஒன்றாக சேர்ப்பவள்.
உலகநாயகி சக்தியாக வீற்றிருக்கிறாள்.
அம்மனை இராகு காலத்தில் பக்தியுடன் மனதார வேண்டினால் சங்கடங்கள் தீர்ந்து நினைத்த காரியம் கைகூடும்.
“கலியுகத்தில் கண்கண்ட தெய்வம்
ஆதிபராசக்தி தான்
அம்மனின் சினத்தை
தணிக்க சிவபெருமான் அம்மனின் காலடியில் சரணடைந்தார்.
“சிவன் இல்லாமல்
சக்தி இல்லை சக்தி இல்லாமல் இவ்வுலகில் எதுவும் இல்லை”
அம்மனின் சக்தியால் ஏழு உலகமும்
சக்தி கண்ணசைவினால் இயங்கிக் கொண்டிருக்கிறது.
சக்தி மஞ்சள் அலங்காரத்தில் மகிமை கொண்டவள்.
தாட் சாயினி
பிரஜாபதி தட்சன்,
பிரசூதி மகளாக தாட்சாயினி அவதரித்தவள்
சக்தியின் மறு உருவம் தாட்சாயினி
தட்சன் வளர்த்து வேள்வி தீயில் சிவபெருமானை அழைக்க தட்சன் மறுத்தார்
தாட்சாயினி கோபத்தின் உச்சியில் இருக்கிறாள் கோவத்தின் உச்சியில் தாட்சாயணி இருக்கிறாள்
தட்சன் வேள்வி தீயில் விழுந்து மாய்த்துக் கொண்டாள்
சிவன் தாட்சாயணி தீயில் இருந்து கையில் ஏந்தி வந்தார்
சிவபெருமான் தாட்சாயினி எடுத்து அலைவதை பார்த்த திருமால் சக்கராயுதத்தினால் தாட்சாயினி உடலை தகர்க்கின்றார்
தாட்சாயினி உடல்
பூலோகத்தில் பல இடங்களில் சிதறுகின்றது
ச்க்தி பீடங்கள் விழுந்த இடத்தில் அம்மன் அவதரித்தாள்
சக்தி பீடங்களாக அம்மனை வழிபடுகின்றனர்.
அம்மன் விழுந்த ஒவ்வொரு உறுப்பும் சக்தி பீடமாக
அம்மன் எழுந்தருளி
அருள் பாலிக்கிறாள்.
அம்மனின் கடைக்கண் பார்வையால் கருணையுடன் அரவணைப்பவள்.
அம்மன் தீயதை அழித்து நல்லதே நிலைநாட்டும் சக்தி கொண்டவள்.
இல்லங்களில் அழகாய்
இன்ப தீபம் ஒளிருதே:
இல்லங்களில் எண்ணங்களால் விளக்கு ஏற்றுவது
வாழ்க்கையை உயர்த்தும் என்பதே நிதர்சனமானவை
அகல் விளக்கில் பஞ்சு திரி போட்டு
நெய் ஊற்றி விளக்கேற்றும் போது
நாம் நினைத்ததை இறைவன் நிச்சயம்
ஒரு நாள்
நிறைவேற்றித் தருவார்.
தீப ஒளியில் தெய்வீகத்தை உணர்ந்தால்
உடலும்,
மனமும் அமைதி அடையும்
கார்த்திகை தீபம் ஏற்றும் போது
இறைவனின் அருளை பரிபூரணமாக
பெறலாம்.
இல்லத்தில் அம்மன் குடிக்கொண்டு இருக்க அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து வாசலை பெருக்கி சாணம் தெளித்து
அழகான வண்ணக் கோலங்கள் போட்டு வேப்பிலையை வாசலில் தோரணம் கட்டி
அம்மனை பக்தியுடன் நினைத்து பூஜை அறையில் காமாட்சி விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.
அம்மனுக்கு உகந்த மலர்
செவ்வரளி,சாமந்தி,மல்லிகை,
செம்பருத்தி, தாமரை
மலர்களைக் கொண்டு
அம்மனை அலங்கரித்து
மனதார வேண்டினால் நினைத்தது
கைகூடும்.
சக்தி
சாம்பிராணி வாசுகியே இல்லத்தில் சாம்பிராணி புகை போடும் போது
நம் இல்லத்தில் அம்மன் தங்கி விடுவாள்.
அம்மனுக்கு பிடித்த பானகம்,
எலுமிச்சை சாதம்,தயிர் சாதம் வகையான பிரசாதங்களை அம்மனுக்கு நைவேத்தியம் அம்மனுக்கு படையலிடும் போது சக்தியின்
அருள் நிச்சயமாக பரிபூரணமாக கிடைக்கும் என்பதே ஐதீகம்.
“அம்மனின் துதி பாடல் அபிராமி அந்தாதி, சகலகலாவல்லி மாலை, லலிதா சகஸ்ரநாமம்,
சகல ஐஸ்வரியங்களும் தரும்
துர்க்கை அம்மனின் துதி பாடல் பாடும்
போது மனம் மகிழ்ச்சியில் பொங்கும்
என்பதே ஐதீகம்.
அம்மனை காண ஆலயத்தில் உள்ளே நுழைந்தால் பக்தி பரவசமாகும்.
இவ்வுலகை
ஆளும் சக்தியானவள்
அம்மன் ஆயுதங்களை கையில் ஏந்தி அருளை வழங்கி வருகிறாள்.
இராகுகால நேரம் தான் அம்மனுக்கு உகந்த நேரமாகும்.
காயத்ரி தேவி
முப்பெரும் தேவியாக காட்சி வழங்கிக் கொண்டிருக்கிறாள்.
காயத்ரி அம்மனை பார்ப்பது கோடி புண்ணியமே
காயத்ரி தேவி
மஞ்சள் அலங்காரத்தில் சிரித்த முகத்த அழகி
அழகான பட்டு வண்ண சேலை உடுத்தி தாமரை மலரை சாற்றி வேண்டிக்கொண்டால் நினைத்த காரியத்தை அன்னையாவள்
அகிலத்தை ஆள வந்த ஆதிபராசக்தி அனுதினமும் காயத்ரி அம்மன் ஜொலிக்கிறாள்
ஸ்ரீ காயத்ரி தேவி வேதங்களின் தாயாக கொண்டவள்
ஐந்து தலைகள் கொண்ட காயத்ரி தேவி தாமரை மலரில் கம்பீரமாக வீற்றிருக்கிறாள்
சங்கு சக்கரம் அங்குசம் கபாலம் தாமரை கையில் ஆயுதங்கள் ஏந்தி இருக்கிறாள்
காலையில் காயத்ரியாகவும் நண்பகலில் சாவித்திரியாகவும் மாலை சரஸ்வதியாகவும் வீற்றிருக்கிறாள்
காயத்ரி தேவி அம்மனை பௌர்ணமி நன்னாளில் தீபமேற்றி மனதார வேண்டிக் கொண்டால் நினைத்ததை நிறைவேறும் தரும் அன்னையாவள்
காயத்ரி மந்திரத்தை அனுதினமும் உச்சரிக்கும் போது உடலும் மனமும் தூய்மை அடையும் அறிவு ஞானம் கல்வி அருளை வழங்கி கொண்டிருக்கிறாள்.
நிறைந்த பௌர்ணமி,அமாவாசை
நாளில் அம்மனை வழிபட்டால்
செல்வ வளம் பெருகும்.
காயத்ரி தேவி மூன்று வேளைகளிலும்
முப்பெரும் தேவியாக
வீற்றிருக்கிறாள்.
பௌர்ணமி நாளும் காயத்ரி தேவி
அம்மனை வழிபட்டால்
வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும்.
தினமும் அம்மனை நினைத்து பாமாலை பாடும் போது மனம் தூய்மையடையும்.
அம்மனை வணங்கினால்
எண்ணங்களும் செல்வங்களும் தெளிவாகும்.
நவகிரகங்களை ஆட்சி புரிபவள் சக்தி தேவியே.
தினமும் உன் புகழை பாடி வந்து
செவ்வாய்கிழமைகளில்;
வெள்ளிக்கிழமைகளில்
உன் கோவிலை நாடி வருகிறோம்.
அம்மனின் அழகு பேரழகு
அம்மனை பார்த்து பக்தியுடன்
வணங்கும் போது இப்பிறவி போதாது.
ஆனந்தத்தில் பேரானந்தம் அம்மனின் காலடியில் சரணடைவது
தான்.
எழுத்தாளர் மா. நந்தினி
சேலம்.






