அப்பா..!
கருவறையில் வைத்து
வழிபடப்படாத தெய்வம் அப்பா !
கர்ப்பப்பை இல்லை என்பதற்காகக்
காலம் முழுவதும் பிள்ளைகளை
நெஞ்சில் சுமப்பவர் அப்பா..!
தனக்கு ஆண்குழந்தை பிறந்தால்
ஊரே சொல்லும்
சிங்கக்குட்டி பொறந்துருக்கான் என்று…
ஆனால் பெண்குழந்தை பிறந்தால்
எங்கம்மாவே எனக்கு மகளாகப் பிறந்திருக்காங்க
என்று சொல்வார் அப்பா..!
அப்பா என்னும் சாமி !
அவராலே அழகாகும் இந்தப் பூமி..!
நான் முன்பே சொல்லியிருந்தேன்
அப்பா என்பவர் கடவுள் போல!
ஆகையால் நானும் சீக்கிரம்
ஒரு கடவுளாக வேண்டும்..!
கவிதையின் ஆசிரியர்
த. பிரகாஷ் ராஜ்
புறாகிராமம், நாகப்பட்டினம்