“கல்தோன்றி மண்தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தக்குடி தமிழ்க்குடி ” என்பார்கள். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிவபெருமானின் அருளால் அகத்திய முனிவரால் பொதிகைமலை என்னும் தமிழ்நாட்டிற்குத் தமிழ்மொழி கொண்டு வரப்பட்டது. இலக்கணங்கள், இலக்கியங்கள், காப்பிங்கள், நிகண்டுகள், அகராதிகள், சிந்தாந்த நூல்கள் எனப் பலதரப்பட வகைமையுடைய நூல்கள் தமிழ்மொழியில் எழுதப்பட்டன. இருப்பினும் ஆங்கிலேயர்கள், வடநாட்டவர்கள், இஸ்லாமியர்கள் என அந்நியர்களின் படையெடுப்பால் மொழிக்கலப்பு ஏற்பட்டது.
மக்களின் இயலாமை, பிறமொழியின் மீதுள்ள ஈர்ப்பு, புதியமொழி என்கிற ஆசை, அம்மொழிகளைக் கற்றால் அறிவு பெருகும் என்கிற எண்ணம் போன்றவைகள் மக்களைத் தமிழ்மொழியோடு பிறமொழிகளையும் கலந்து பேச வைத்தது. இதன் காரணமாகப் பிறமொழிக்கலப்பு அதிகமானது. காலம் செல்லச்செல்ல இளம்தலைமுறையினருக்குப் பிறமொழிகள்கூட தமிழ்மொழிதான் என்கிற உணர்வும் எண்ணமும் உண்டாயிற்று. இப்படியே சென்றால் ஒருகாலக்கட்டத்தில் உண்மையான மொழி அழிந்து பிறமொழிகள் கலந்து பேசக்கூடிய கலப்பு மொழியே உண்மையாகிவிடும். இதன்காரணமாகப் பிறமொழிச் சொற்களைக் கண்டறிந்து, அவற்றினைக் களைந்து தூயத்தமிழ்ச் சொற்களையே பேசுவோம்.
வ.எண் வடமொழிச்சொற்கள் தமிழ்ச்சொற்கள் 1 அகங்காரம் செருக்கு 2 அகதி ஆதரவற்றவர் 3 அகிம்சை ஊறு செய்யாமை 4 அக்கினி எரி, தீ 5 அக்கிரகாரம் பார்ப்பனர் குடியிருப்பு 6 அங்கத்தினர் உறுப்பினர் 7 அங்கீகாரம் ஒப்புதல் 8 அசுத்தம் துப்புரவின்மை 9 அதமம் கடையானது 10 அதிகாரி தலைமை அலுவலர் 11 அநீதி முறையற்றது 12 அபயம் அடைக்கலம் 13 அபாயம் துன்பம் 14 அபிவிருத்தி பெரு வளர்ச்சி 15 அபிஷேகம் திருமுழுக்கு 16 அபூர்வம் அருமை 17 அவசரம் விரைவு 18 அவசியம் தேவை 19 ஆகாயம் வானம் 20 ஆக்கிரமிப்பு வலிந்து கவர்தல் 21 ஆசீர்வாதம் வாழ்த்து 22 ஆபத்து துன்பம் 23 ஆராதனை வழிபாடு 24 ஆன்மா உயிர் 25 அபிப்ராயம் உட்கருத்து 26 இராகம் பண் 27 இரத்தினம் செம்மணி 28 இரத்தம் குருதி 29 இலட்சணம் அழகு 30 உதாரணம் எடுத்துக்காட்டு 31 உத்தியோகம் அலுவல் 32 உபத்திரவம் வேதனை 33 உற்சவம் விழா 34 ஐக்கியம் ஒற்றுமை 35 கஷ்டம் தொல்லை 36 கல்யாணம் திருமணம் 37 காரியம் செயல் 38 காரியதரிசி செயலர், செயலாளர் 39 கஷாயம் துவராடை 40 கிரகம் கோள் 41 கிரயம் விலை 42 கிராமம் சிற்றூர் 43 குஷ்டம் தொழுநோய் 44 குதூகலம் ஏக்களிப்பு 45 கும்பாபிஷேகம் குடமுழுக்கு 46 குருபக்தி ஆசிரியர், பேரன்பு 47 சக்தி ஆற்றல் 48 சகஜம் வழக்கம் 49 சகோதரன் உடன்பிறந்தவன் 50 கிரகணம் புற்றுகை 51 இமாலயம் பனிமலை 52 இந்திரஜாலம் கண்கட்டுக் காட்சி 53 சபதம் சூள் 54 சமீபம் அண்மை 55 ஜலதோசம் தடுமம் 56 சந்தாப்பம் வாய்ப்பு 57 சிநேகம் நட்பு 58 சுதந்திரம் உரிமை 59 சுத்த தமிழ் தூயதமிழ் 60 சுபாவம் இயல்பு 61 சூரியன் ஞாயிறு 62 சேவை தொண்டு 63 தருமம் அறம் 64 தாகம் வேட்கை 65 தேதி நாள் 66 நஷ்டம் இழப்பு 67 நிபுணர் வல்லுநர் 68 பஞ்சாங்கம் நாளோதி 69 பரிகாசம் நகையாடல் 70 பத்திரிக்கை இதழ் 71 பாரம் சுமை 72 பாலகன் குழந்தை 73 பாஷை மொழி 74 பிரயாணிகள் வழிச்செலவினர் 75 பிரசாதம் திருப்பொருள் 76 பிரார்த்தனை நேர்த்திக்கடன் 77 மத்தியானம் நண்பகல் 78 சந்நிதி திருமுன்பு 79 சந்தேகம் ஐயம் 80 மரணம் சாவு 81 மாதம் திங்கள் 82 மாமிசம் இறைச்சி 83 முகூர்த்தம் நல்வேளை 84 மோட்சம் வீடு 85 எமன் கூற்றுவன் 86 யாத்திரை திருச்செலவு 87 யுத்தம் போர் 88 ரகசியம் மறைபொருள் 89 ருசி சுவை 90 லாபம் ஊதியம் 91 வயது அகவை 92 வருஷம் ஆண்டு 93 வாகனம் ஊர்தி 94 விகிதம் விழுக்காடு 95 விவாகம் திருமணம் 96 வீரம் மறம் 97 ஜனங்கள் மக்கள் 98 ஜாதகம் பிறப்பு, கணிப்பு 99 ஜென்மம் பிறவி 100 ஸ்தாபனம் நிலையம் 101 ஸ்மரித்தல் நினைவுகூர்தல் 102 ஷவரம் மழிப்பு 103 பௌர்ணமி முழுமதி 104 மந்திரம் மறைமொழி
வ.எண் போர்த்துகீசிய சொற்கள் தமிழ்ச்சொற்கள் 1 சாவி திறவுகோல் 2 ஜன்னல் காலதர் 3 பாதிரி கிறிஸ்தவ தொண்டர்
வ.எண் தெலுங்குச் சொற்கள் தமிழ்ச்சொற்கள் 1 அப்பட்டம் வெளிப்படையாக 2 ஆஸ்தி செல்வம் 3 எக்கச்சக்கம் மிகுதி 4 கச்சிதம் ஒழுங்கு 5 கெட்டியாக உறுதியாக 6 கெலிப்பு வெற்றி 7 கேட்பை கேழ்வரகு 8 சந்தடி இரைச்சல் 9 சாகுபடி பயிரிடுதல் 10 சொச்சம் மிச்சம் 11 சொந்தம் உறவு 12 தாறுமாறு ஒழுங்கின்மை 13 தெம்பு ஊக்கம் 14 தொந்தரவு தொல்லை 15 நிம்மதி கவலையின்மை 16 பண்டிகை பெருநாள் 17 பந்தயம் பணயம் 18 மச்சு மேல்தளம் 19 மடங்கு அளவு 20 வாடகை குடிக்கூலி 21 வாடிக்கை வழக்கம்
வ.எண் கன்னடச் சொல் தமிழ்ச்சொற்கள் 1 அக்கடா வான 2 அதற்கோசரம் அதற்காக 3 அக்கறை கவனம்
வ.எண் அராபியச் சொற்கள் தமிழ்ச்சொற்கள் 1 ஆஜர் பட்டி வருகை பதிவேடு 2 இனாம் நன்கொடை 3 ஈது பண்டிகை 4 ஜவேஜ் உடைமைகள் 5 கலால் சாராயம் 6 காயம் நிலையான 7 காஜி நீதிபதி 8 குலாம் அடிமை 9 கைதி சிறையாளி 10 சராப்பு காசுக்கடை 11 சவால் அறைகூவல் 12 சாமான் பண்டம் 13 ஜவாப் மறுமொழி 14 ஜாஸ்தி மிகுதி 15 ஜாமீன் பிணையாதல் 16 ஜுட் பொய் 17 தாவா வழக்கு 18 திவான் அமைச்சர் 19 மஹால் அரண்மனை 20 மாமூல் பழைய வழக்கம் 21 வேடிக்கை காட்சி
வ.எண் பாரசீகச் சொற்கள் தமிழ்ச்சொற்கள் 1 அம்பாரம் குவியல் 2 அலாதி தனி 3 ஆப்காரி மதுவாரி 4 கரம் சூடு 5 கறார் விலை ஒரே விலை 6 கம்மி குறைவு 7 கிஸ்தி வரி 8 சரகம் எல்லை 9 சர்க்கார் அரசாங்கம். 10 சந்தா கட்டணம் 11 சாவி பதர் 12 சிப்பந்தி வேலையாள் 13 சிப்பாய் படைமறவன் 14 சுமார் ஏறக்குறைய 15 ஜமீன் நிலம் 16 ஜரூர் விரைவாக 17 தயார் ஆயத்தம் 18 படுதா திரைச்சீலை 19 பந்தோபஸ்து திட்டப்படுத்திய பாதுகாப்பு 20 பாரா காவல் 21 பூரா முழுவதும் 22 பேஷ் மிக நன்று 23 ஷோக் பகட்டு
வ.எண் இந்துஸ்தானியச்சொற்கள் தமிழ்ச்சொற்கள் 1 இஸ்திரிப்பெட்டி துணிமடிப்புக் கருவி 2 உண்டியல் காசோலை 3 கமால் வளைவு 4 கசாபு இறைச்சி 5 கலாய் ஈயம் 6 கஜம் 1 மீட்டர் 7 கசாலா வருத்தம் 8 கமாச்சு வேலை 9 காலிப்பயல் போக்கிரி 10 குர்சி நாற்காலி 11 சாபா முத்திரை 12 சிபாரிசு பரிந்துரை 13 சோதா சோம்பேரி 14 ஜட்கா குதிரைவண்டி 15 ஜாகீர்தார் நிலக்கிழார் 16 ஜாடா முழுவதும் 17 ஜாகை தங்கும் இடம் 18 பாணா காவல் நிலையம் 19 தம் மூச்சு 20 பஞ்சாயத் ஐவர்குழு 21 பல்லாக்கு சிவிகை 22 பஜாரி வாயாடி 23 ஷராய் காற்சட்டை 24 அந்தஸ்து நிலைமை 25 அபின் அபினி 26 ஆஸாமி ஆள்
வ.எண் ஆங்கிலச்சொற்கள் தமிழ்ச்சொற்கள் 1 அக்கவுண்ட்ஸ் வரவு செலவுக் கணக்கு 2 ஆக்ஷன் நடிப்பு 3 ஏஜ் அகவை 4 ஏஜென்ஸி முகமை 5 ஏஜெண்டு முகவர் 6 ஏர்ஹோஸ்டஸ் வானூர்திப் பணிப்பெண் 7 ஏர்ப்போர்ட் வானூர்தியகம் 8 ஆல்பம் பட ஏடு 9 அபார்ட்மெண்ட் குடியிருப்புப் பகுதி 10 ஆர்ட்டிஸ்ட் கலைஞர் 11 ஆடியோ கேட்பு 12 ஆடிட் தணிக்கை 13 ஆண்ட்டி அத்தை 14 ஆட்டோ தானி 15 ஆட்டமாடிக் தானே இயங்கி 16 பேக் பை 17 பாங்க் வங்கி 18 பெட் பந்தயம், பணயம் 19 பீச் கடற்கரை 20 பெஞ்ச் நீள் இருக்கை 21 போர்டு வாரியம் 22 பூட்ஸ் மூடுகாலணி 23 பாஸ் தேர்ச்சி 24 பாட்டில் புட்டி 25 பட்ஜெட் வரவு செலவு 26 பிஸி சுறுசுறுப்பு 27 பிஸ்னஸ் வணிகம் 28 பஸ் ஸ்டாண்டு பேருந்தகம், பேருந்து நிலையம் 29 காண்டீன் உணவகம் 30 கேமரா படக்கருவி 31 கேம்ப் முகாம் 32 கார்ட்டூன் கருத்துப்படம் 33 கேஸ் வழக்கு 34 கேஷியர் காசாளர் 35 சினிமா திரைப்படம் 36 சென்ட்ரல் நடுவணம் 37 சேர் பங்குத் தொகை 38 சார்ஜ் கட்டணம் 39 சிக்கன் கோழி 40 கேரக்டர் பண்புநலன் 41 சர்க்குலேஷன் சுற்றுவிடல் 42 க்ளைமாக்ஸ் உச்சக்கட்டம் 43 க்ளோஸ் முடித்தல் 44 காபி குழம்பி 45 காலேஜ் கல்லூரி 46 கமர்ஷியல் வணிக 47 காமெடி நகைச்சவை 48 கம்பெனி குழுமம் 49 கம்ப்யூட்டர் கணினி, கணிப்பொறி 50 கண்ட்ரோல் கட்டுப்படுத்து 51 டாடி தந்தை 52 டிகிரி கலை (பாகை) 53 டீலர் விற்பனையாளர் 54 டிலே காலந்தாழ்த்துதல் 55 டிபார்ட்மெண்ட் துறை 56 டைரி நாட்குறிப்பேடு 57 டைரக்டர் இயக்குநர் 58 டைரக்டரி குறிப்பேடு 59 டிஸ்மிஸ் நீக்கு, விலக்கு 60 டைவர்ஸ் மணவிலக்கு 61 டிரைவர் ஓட்டுநர் 62 ட்யூட்டி பணிக்கடமை 63 எலெக்ட்ரானிக் மின் நுட்பம் 64 ஃபாக்டரி தொழிற்சாலை 65 ஃபீஸ் கட்டணம் 66 ஃபைல் கோப்பு 67 ஜெனரேஷன் பரம்பரை 68 கவர்ண்மெண்டு அரசு 69 கைடு வழிகாட்டி 70 ஹால் பேரறை 71 ஹீரோ நிகரில் தலைவன் 72 ஹைவேஸ் பெருவழி 73 ஹாஸ்பிடல் மருத்துவமனை 74 ஹாஸ்டல் விடுதி 75 ஓட்டல் உணவுச்சாலை 76 இன்கிரிமெண்ட் ஆண்டு ஊதிய உயர்வு 77 இடியட் முட்டாள் 78 இன்டர்வியூ நேர்காணல் 79 ஜாம் பழக்கூழ் 80 ஜெயில் சிறை 81 ஜோக் நகை 82 ஜாய் மகிழ்வு 83 ஜடஜ் தீர்ப்பு உரைஞர் 84 மேடம் மாதரீர் 85 மார்க்கெட் கடைவீதி 86 மீட்டிங் கூட்டம் 87 மிலிட்டெரி பட்டாளம், தரைப்படை 88 மியூசியம் பொருட்காட்சி 89 மைனாரிட்டி சிறுபான்மையர் 90 நேஷனல் நாட்டியல் 91 நெகட்டிவ் எதிர்மை 92 நோட்டீஸ் குறிப்பாணை 93 ஆபீஸ் அலுவலகம் 94 ஆப்பரேஷன் அறுவை 95 அவுட்டோர் வெளியலகக் காட்சி 96 ஓவர்டைம் மிகை நேரம் 97 பார்சல் பொட்டலம் 98 பர்சனல் தனிப்பட்ட 99 போன் தொலைபேசி 100 போட்டோ புகைப்படம் 101 பிளாட் மனை 102 போலிஸ் காவலர் 103 பவர்கட் மின்தடை 104 பௌடர் நறுஞ்சுண்ணம் 105 பிராக்டிகல் செயல்முறை 106 பிரைவேட் தனியார்க்குரிய 107 புரோக்ராம் நிகழ்ச்சிநிரல் 108 க்யூ வரிசை 109 கோட்டா ஒதுக்கீடு 110 ரேஸ் சவாரி 111 ரயில்வே இருப்புவழி 112 ரேஷன் பங்கீடு 113 ரிஜிஸ்டர் பதிவு 114 ரிப்போர்ட் புகார் 115 ரெஸ்டாரண்ட் உணவகம் 116 ரூல்ஸ் விதிகள் 117 செலக்ட் தேர்ந்தெடு 118 ஸெக்ஸ் பாலியல் 119 சர்வர் பணியாள் 120 சர்வீஸ் பணி 121 சில்க் பட்டு 122 சைஸ் அளவு 123 ஸ்பெஷல் சிறப்பு 124 ஸ்டேட் மாநிலம் 125 ஸ்டேசன் நிலையம் 126 ஸ்டைல் நடை 127 ஸர்ப்ரைஸ் வியப்பு 128 சப்ளை வழங்கு 129 குட்கேஸ் கைப்பெட்டி 130 ஸ்டேஷனரி எழுதுபொருள் 131 டெக்னிக் தொழில்நுட்பம் 132 டைப்பிஸ்ட் தட்டச்சர் 133 யூனிஃபார்ம் சீருடை 134 யூனியன் ஒன்றியம் 135 யுனிவர்சிடி பல்கலைக் கழகம் 136 வெஜிடபிள் காய்கறி 137 விஸில் சீழ்க்கை 138 வாமிட் வாந்தி
பிறமொழிச் சொற்களுக்கான தமிழாக்கம் தருக
மேலும் இலக்கணம் மற்றும் மொழிபெயர்ச்சிகளைக் காண்க..
Like this: Like Loading...
Related