
இங்குள்ள மனித உருவங்கள் தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள ஓவியங்களை விட முற்றிலும் மாறுபட்டுள்ளன. குறிப்பாக, ஆஸ்திரேலியா (Aboriginal Rock Art) மற்றும் இங்கிலாந்து நாடுகளில் உள்ள பழங்கால ஓவியங்களோடு இவை ஒத்துப் போகின்றன.
கதிர்வீச்சு உருவங்கள் (Radiation Figures): தலைப்பகுதியில் கதிர்கள் சூழ்ந்தது போன்ற அமைப்பு, தெய்வத் தன்மையையோ, ஆவி வழிபாட்டினையோ அல்லது குழுத் தலைவனையோ குறிப்பதாக இருக்கலாம்.
எக்ஸ்ரே ஓவியம்: ஒரு விலங்கின் உட்பகுதியையும் காட்டும் ‘எக்ஸ்ரே’ பாணி ஓவியம் இங்குள்ளது. இது ஒரு காட்டு எருமை அல்லது ஆமையைக் குறிக்கலாம். விலங்கு-மனித பிணைப்பு: மனித உருவங்களுக்கு அருகே மான் அல்லது காட்டுப் பசுவின் உருவங்கள் உள்ளன. இது ‘விலங்கு ஆவி’ மனிதனுக்குள் புகுந்து ஆற்றல் அளிப்பதாக நம்பப்பட்ட சடங்கு முறையுடனான பழந்தமிழரின் மெய்யியல் கோட்பாட்டை காட்டுவதாக உள்ளது.
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575
This will close in 20 seconds


