சூரியன் வந்துவிட்டால்
நம் உயிர் பிரிந்திடுமோ – எனச்
சேவல் நடுநடுங்கும் போது
என் வெண்ணிலா காணவில்லையேயென
மனம் உருகி விழி விழித்தேன்..!
சூரிய பகவானைப்
பூப்பொட்டுப் பொங்கல் யாவும் வழிபட
வாசாமி என அனைவரும் கைக் கூப்ப..!
வந்தாலே என் வெண்ணிலா
கண்குளிற..
வணங்கினேன் என்சாமி – என
அந்த முகிழறிய..!
வாசல் தொடைக்க நீரின்றி
நீ அங்கும் இங்கும்
குடம் சுமைக்கையில்..
எனது கண்ணீரைக்
கடலாகத் தந்துவிடு – என
சூரியனை வேண்டினேன்..!
கோழி அறுக்கையல
நீ கோலம் இடுகையில..
உன்னை ராட்சனாய் ரசித்தேனடி
ஓர் உயிர் பிரிகையல..!
என்னை பார்ப்பாயா
இல்லையாயன – நான்
உன்னையே மையமிட..!
நீ இடும் கோலத்திலே
மையம் கொண்டாயடி..!
ஏனடி எனக் கேட்டால்
நான் மூளையற்றவன் ஆவேனடி..!
நான் உன்னை ரசிப்பது
நீ பார்க்காமலேயே அறிவாயடி..
உன் மையம் கோலத்தில் அல்ல
மாமனின் மனதிலே என்பதை
நான் மட்டுமே அறிவேனடி..!
இஞ்சி இடுப்பை வளைத்து
வஞ்சிக் கொடியாய் நிமிர்ந்து
நெஞ்சு நெகிழ்ந்திட
நீ சிரிக்கையில்…
ஓடி வந்து கட்டி அனைத்து
முத்தக் கோலமிடுடா என நீ
சொல்வது எனக்கு புரிந்தது..!
நீ பால் வாங்க போகையில்
உன்னோடு நான்செல்ல இயலாதது
என் வாழ்வில் விலை மதிப்பில்லாத
ஒரு வேலையை இழந்தது போல் புலம்பினேன்..!
நீ செல்லும் வழியெங்கும் விழி வைத்தேன்
சட்டென சாலையில்
நீ மறைந்தப்பின்..
நீ வருவாயன ஏங்கினேன்..!
வந்தாலே என் தேவதை…
பாற்கடலின் பூங்கோதை…
சிரித்துக் கொண்டு சிறகடித்தேன்..
அது ஒரு தனி போதைதானடி..!
அந்த ஓர் அதிகாலை…
சூரியனை ஏமாற்றிய ஒரு வேளை..
உன்னை ரசித்தேனடி !
உன்னை ரசித்தேனடி !
கவிதையின் ஆசிரியர்
கவிஞர் க.கலைவாணன்
ஓசூர் – 635 109
ஆசிரியரின் பிற கவிதைகளைப் படிக்க – You searched for க.கலைவாணன் » இனியவை கற்றல் | பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (iniyavaikatral.in)