திறனாய்வினால் சமுதாயத்திற்கும் இலக்கியப் படைப்பு வரலாற்றிற்கும் பயன்கள் உண்டாகின்றன. இலக்கியத் திறனாய்வில் கீழ்க்காணும் பயன்கள் உண்டாகின்றன.
- சிறந்த கலைப்படைப்புத் தேர்ந்தெடுக்கப்படுகிறது.
- இலக்கியக் கொள்கைகள் உருவாகின்றன.
- புதிய இலக்கியங்களைப் தூண்டப்படுகின்றனர்.
- இலக்கிய வரலாற்றிற்குத் தேவையான தகவல்கள் கிடைக்கின்றன.
- இலக்கியத் திறனாய்வு வரலாறு உருவாகிறது.
- இலக்கியப் பிழைகள், இலக்கணப் பிழைகள் நீங்குகின்றன.
- சமூக வரலாற்றை அறிந்து கொள்ள முடிகிறது.
- கலையின் சிறப்பும் அதனைக் கற்போர்க்கு உண்டாகும் மகிழ்வும் சமூக வளர்ச்சிக்கு உதவுகின்றன.
- கலை, கலைக்காக மட்டுமன்று. கலை சமூகத்திற்காகவும் இருக்கிறது என்பதை வெளிப்படுத்தல்.
- தனிமனிதரின் ஆளுமை, தனி இலக்கியச் சிறப்பு முதலியன அறிந்து கொள்ளப்படுகின்றன.
இலக்கியத் திறனாய்வின் பயன்கள் யாவை? | What are the benefits of literary criticism?
கீழ்க்கண்ட நூலிலிருந்து எடுக்கப்பட்டவை
இலக்கியத் திறனாய்வு – வகைகளும் வளர்ச்சியும்
பேராசிரியர் இரா.மருதநாயகம்